எம்.சி.எம்.றிஸ்வான் மதனீ, காத்தான்குடி
2013 ஜனவரி 09ம் திகதி, மூதூரைச் சேர்ந்த றிசானா நபீக்கிற்கு சவூதி அரேபியாவில் துஆத்மீ நகரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்வு பற்றி சர்வதேச, தேசிய, பல அச்சு, இலத்திரணியல் ஊடகங்களும் அமைப்புக்களும் சில அறிஞர்களும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். இவற்றில் பெரும்பான்மையானவை அறிவு பூர்வமாகவம் யதார்த்தத்தை புரிந்து கொண்டவையாகவும் இருக்கவில்லை. அதைவிடவும் வேதனையாகவும் ஆச்சரியமாகவும் இருந்த விடயம் என்னவெனில் இஸ்லாமிய கற்கை நெறிகளை நவீன முறைகளில் கற்றவர்களில் ஒருவர் அநாகரீக வார்த்தைகளாலும் எய்தவன் இருக்க அம்பை நோகுகின்ற கதையாய் கருத்து வெளியிட்டிருந்தார்.
சுருக்கமாக இவ்வாறான விமர்சனங்களில் பின்வரும் விடயங்கள் உள்ளடக்கியிருந்தன.
1. இஸ்லாத்தின் மீது கொண்ட கால்புனர்ச்சி.
2. அநாகரீக வார்த்தைப் பிரயோகம்.
3. சில ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்கள்.
4. சவூதி அரேபியாவின் நிருவாக மற்றும் நீதி கட்டமைப்பின் பெறுமானங்களை இல்லாமல் ஆக்குவது.
5. ஸலபி சந்தனை உலமாக்களையும் நிருவனங்களையும் கொச்சைப்படுத்துதல்.
6. மேற்கத்திய மனித உரிமை கருத்தாடல்களின் கவர்ச்சி.
எனவே, இவற்றிற்கப்பால் நடு நிலமையாகவும் நாகரீகமாகவும் யதார்த்தங்களை விளக்கும் முகமாக இச்சிறு குறிப்பைத் தருகின்றேன்.
இன்றைய இஸ்லாத்தின் வளர்ச்சி மேற்கத்திய நாடுகளில் மேலோங்குகின்ற நிலையில் மேற்கத்திய சிந்தனைவாத சக்திகள் அறபு நாடுகளை குறிப்பாக புனித இரு ஹரம்கள் அமைந்திருக்கின்ற சவூதியினை குறி வைத்தவண்ணம் இருக்குகின்றன.
அங்குள்ள சட்ட முறைகள், தண்டனைக் கோவைகள் போன்றவற்றை விமர்சிப்பது ஷீஆ சிந்தனையாளர்களை, அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாத்தினர்களுக்கு எதிராக தூண்டிவிடுவது போன்ற விடயங்களை மேற்கொண்டு வருகின்றது. அறபு நாடுகளின் இன்றைய நிலையில் குறிப்பிடத்தக்க வகையில் இஸ்லாமிய சட்டங்களையும் தண்டனை முறைகளையும் நடைமுறைப்படுத்துவது சவூதி அறேபியாவாகத்தான் இருக்கின்றது.
எனவே, எடுத்த எடுப்பில் அதனை விமர்சிப்பது மேற்கத்திய சக்திகளுக்கு உறுதுணையாக அமையும் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். நான் இவ்வாறு கூறுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்து கொள்ளலாம்.
சவூதியின் நீதி,நிருவாக சட்டங்கள்
சவூதி அறேபியாவின் நீதித்துறை முறைமைகள் குற்றவியல் தண்டனைக் கோவைகள் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை விளங்குதல் அவசியமாகும்
ஊள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் ஹிஜ்ரி 1399/1/30 ஆம் திகதிய 2697/16 ஆம் இலக்க சுற்று நிருபத்தின் முதலாம் பந்தி இவ்வாறு குறிப்பிடுகின்றது.
‘வெளிநாட்டவர் கைது தொடர்பாக அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சுக்கு குறித்த நபர் கைது செய்யப்பட்டு ஒரு வார காலத்திற்குள் சிறைவைக்கப்ட்ட இடம் அதற்கான காரணம் தீர்ப்பு வழங்கப்பட்டதா இல்லையா வழக்கிற்கான தவனை விடுதலை செய்யப்படுவதாயின் அதன் காலம் என்பவற்றை தந்திமுலம் உள்நாட்டு அமைச்சு அறிவிக்கவேண்டும்.
அரசியல் யாப்பின் உறுப்புரை 46 இவ்வாறு கூறுகின்றது.
‘நீதித்துறை சுயாதீனமிக்க ஒரு அதிகாரமாகும். நீதிபதிகளை ஆதிக்கம் செலுத்தும் அதிகாரமாக இஸ்லாமிய ஷரீஆவே காணப்படுகின்றது’
நீதித்துறை சட்டக் கோவையின் உறுப்புரை 104, 105 கூறுகின்றது.
‘குற்றவாளி விசாரணையின் போதோ அதற்கு முன்னரோ குற்றத்தை ஏற்றுக் கொள்ளுதல் ஆதாரமாகக் கொள்ளப்படும். அவ்வாறு ஏற்றுக் கொள்ளுதல் குறித்த விடயம் தொடர்பான வழக்காடலின் போது அமைதல் அவசியம்’
‘குற்றத்தை ஏற்றக் கொள்பவரின் தகைமைகளாக புத்தி சுவாதீனமுள்ளவராகவும், பருவ வயதை அடைந்தவராகவும், குற்றத்தினை சுயாதீனமாக ஏற்றுக் கொள்பவராகவும் அமைதல் வேண்டும்.’
தண்டனைக் கோவை உறுப்புரை 162, 163
‘சந்தேக நபர் எந்த நேரத்தில் தனது குற்றத்தை ஏற்றுக் கொண்டாலும் நீதிமண்ரமானது அதனை தெளிவாக செவிமடுத்து விவாதிக்க வேண்டும். அவ்வாறு சந்தேக நபர் ஏற்றுக் கொண்டது சரியானது எனவும், வேறு ஆதாரங்கள் தேவையில்லை என்றும் கருதும் பட்சத்தில் அவ்வேற்றுக் கொள்ளுதலை கனக்கில் கொண்டு விசாரணையை பூர்த்தி செய்து அது தொடர்பில் வழக்கில் விரிவாக குறிப்பிடல் வேண்டும்.’
சந்தேக நபர் தனது குற்றத்தை மறுக்கும் பட்சத்தில் அல்லது தான் பதிலளிப்பதை தவிர்க்கும் பட்சத்தில் ஏனைய ஆதாரங்கள் தொடர்பில் கவனம் செலுத்தலும் தேவையான நடவடிக்கை எடுத்தலும் அவ்வாதாரங்கள் தொடர்பில் சந்தேக நபரிடம் பூரண விசாரணை நடத்துவதும் நீதி மண்றத்திற்கு அவசியமாகும். இரு சாராருக்கும் சாட்சிகளையும் ஆதாரங்களையும் விவாதிக்க முடியும்.
உறுப்பரை 178
தீர்ப்பக்கான மேன்முறையீடு 30 நாட்களாகும். இக்காலப்பகுதியில் தண்டனை விதிக்கப்பட்டவர் மேன்முறையீடு செய்யவில்லையாயின் அவ்வுரிமையை இழந்து விடுகின்றார்.
தண்டனைக் கோவை உறுப்பரை 195
மேன்முறையீடு செய்பவர் குறித்த காலத்திற்குள் தனது முறைப்பாட்டினை சமர்ப்பிக்காவிடினும் குறித்த நீதிமண்றம் தனது தீர்ப்பினை மேல்முறையீடு நீதிமன்றத்திற்கு 45 நாட்களுக்குள் அனுப்பிவைக்கும். தீர்ப்பானது கொலை, திருமணம் புரிந்தவரது விபச்சாரம், கரச் சேதம் ஏனைய உறுப்பக்களின் சேதங்கள் தொடர்பாக இருப்பின் எவரும் மேன்முறையீட்டை கேட்காவிடினும் குறித்த காலத்திற்குள் நீதிமன்றம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இத்தீர்ப்பினை அனுப்புவது அவசியமாகும்.
தண்டனைக் கோவை உறுப்பரை 11, 12
கொலை திருமணம் புரிந்தவரத விபச்சாரக் குற்றம், கரச்சேதம், ஏனைய உறுப்புக்களின் சேதம் தொடர்பாக மேன்முறையீடு நீதிமன்றத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட தீர்ப்புக்கள் உச்ச நீதிமன்ற சபையின் ஒப்புதலுடனேயே இறுதி சட்ட வடிவம் பெறும்.
உச்ச நீதிமன்றின் ஒப்புதலைப் பெறாத எந்த தீர்ப்பும் நிராகரிக்கப்பட்டதாக மாறுவதோடு புதிய நீதிபதிகளால் மீண்டும் அவ்வழக்கு விசாரனைக்காக எடுத்துக் கொள்ளப்படும்.
மேற்கூறப்பட்ட இவ்வாறான சட்டமுறைகளுக்கு அமையவே சவூதி அரேபியாவின் நீதிமன்றங்கள் இன நிற சாதி வேறுபாடுகளுக்கு அப்பால் இயங்கிக்கொண்டிருக்கின்றன. சகோதரி றிசானா நபீpக் அவர்களும் இச்சட்ட முறைகளுக்கு புறம்பானவர் அல்ல.
அத்தோடு குறித்த சந்தேகநபர் வழக்கறிஞ்ஞரின் உதவிகளையும் பெற்றுக் கொள்ள முடியும். உண்மை நிலை இவ்வாறிருக்க வழங்கிய தீர்ப்பினையும், தீர்ப்பினை வழங்கிpய நாட்டினையும் விமர்சிப்ப்பவர்கள் இவ்வாறான சட்டத்திற்கு அமைய றிசானாவின் விசாரணையும் தீர்ப்பும் இடம்பெறவில்லை என்பதை ஆதாரத்தினடிப்படையில் நிறூபிக்க வேண்டும்.
இவ்வாறான சட்ட முறைமைகளையும் மீறி தீர்ப்பு தவறாக வழங்கப்பட்டுவிட்டது என நிருபனமானால்?
தவறான தீர்ப்பைப் பொறுத்தவரையில் அதை இரு வகைகளாக நாம் நோக்க முடியும்.
தவறான தீர்ப்பைப் பொறுத்தவரையில் அதை இரு வகைகளாக நாம் நோக்க முடியும்.
1. தனது அறிவுப் பலவீனத்தாலும் வழக்கு விசாரணை முறைமையிலும் ஏறற்பட்ட தவறு.
2. திட்டமிட்டு பழிவாங்கும் உணர்ச்சியுடன் சாதி நிற வேறுபாடுகளின் அடிப்படையில் ஏற்படும் தவறு.
முதல் விடயத்iதைப் பொறுத்தவரையில் நபியவர்களின் பொன் மொழியினை இங்கு தருதல் பொருத்தமானதாகும்.
அபூ ஹுரைறா (றழி) அவர்கள் கூறுகிறார்கள் ஒரு ஹாக்கிம் (தீர்ப்புக் கூறுபவர்) ஆய்வு செய்து சரியானதை எட்டினால் அவருக்கு இரு நன்மைகள் உண்டு. அவர் ஆய்வு செய்து அதில் தவறிழைத்தால் அவருக்கு ஒரு நன்மையுன்டு.
(அல்முன்தகா-966)
(அல்முன்தகா-966)
இதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். இரண்டாம் விடயத்தைப் பொறுத்தவரையில் பின்வரும் நபிமொழி அவ்வாறான நீதிபதிகளுக்க எச்சரிக்கையாக அமைந்துள்ளதைக் காணலாம்.
இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறுகின்றார்கள், நபி (ஸல்) அவர்கள் முஆத் (றழி) அவர்களைள எமனுக்கு அனுப்பும் பாது கூறினார்கள் அநீதி இழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு அஞ்சிக் கொள்ளுங்கள். ஏனெனில் அவனுக்கும் அல்லாஹ்வுக்குமிடையில் திரை ஏதுமில்லை
(புகாரி-77:48)
(புகாரி-77:48)
எனவே றிசானாவின் சாபத்திலிருந்து அநீதியிழைத்த நீதிபதிகள் தப்பிக்க முடியாது.
இதைவிடவும் வழக்கு விசாரணையின் உண்மை நிலையினை நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள்.
நீங்கள் என்னிடம் வழக்குத் தொடுக்கின்றீர்கள் உங்களில் சிலர் சிலரை விடவும் தனது ஆதாரத்தை நேர்த்தியாக முனன்வைப்பவர்களாக உள்ளீர்கள். எனவே, எவருக்கு அவரது சகோதரனின் உரிமையில் ஏதேனும் ஒன்றை தீர்ப்பாக அவரின் கூற்றின் அடிப்படையில் நான் வழங்கினால் அது நெருப்பின் ஒரு துண்டாகவே வழங்குகின்றேன். எனவே, அதை எடுக்க வேண்டாம்.
(புகாரி 26:80)
(புகாரி 26:80)
இந்த நபிமொழியானது ஒரு வழக்கின் யதார்த்தத்தை எடுத்துக் காட்டுகின்றது. ஒரு வழக்கின் போது முன்வைக்கப்படும் ஆதாரங்கள் அதனை முன்வைக்கும் விதம் என்பன நீதிபதியின் தீர்ப்பில் ஆதிக்கம் செலுத்தும் காரணியாக அமையும் என்பதை நாம் புரிந்து கொள்கின்றோம்.
நபி (ஸல்) அவர்களிடம் முன்வைக்கப்படும் வழக்குகளுக்கு ஆதாரத்தின் அடிப்படையிலேயே தீர்ப்பினை வழங்கியுள்ளார்கள். இதுதான் மனிதனின் யதார்த்த நிலையாகும்.
கல் நெஞ்சு படைத்த தாய் உள்ளம்
அடுத்து முன்வைக்கப்படும் விமர்சனம் குழந்தையை இழந்த தாய் ஏன் றிசானாவை மன்னிக்கவில்லை? அத்தாய் கல் நெஞ்சு உள்ளவராக அல்லவா இருக்கின்றார்? என்பதாகும்.
ஒரு மனிதன் பழிக்குப் பழி வாங்கும் உரிமையை இஸ்லாம் வழங்கியிருக்கின்ற அதே நேரம் அப் பழிவாங்கலை மன்னிக்க முடியும் என்றும் கூறியுள்ளது. ஸுரத்துல் பகறாவின் 178 வது வசனம் இச்சலுகை பற்றிக் குறிப்பிடுகின்றது.
எனினும் அவ்வாறு மன்னிப்பதை இஸ்லாம் கடமையாக்கவில்லை. எனவே, இஸ்லாம் கடமையாக்காத ஒரு விடயத்தை நாமும் கடமையாக்க முடியாது. அவ்வாறு மன்னிக்காதவர்களை இழிவாக பார்க்கவும் முடியாது.
சவூதி அறேபிய நீதி மன்றங்களில் முறையாக வழக்குத் தொடரப்பட்டால் சட்டத்தின் பிடியிலிருந்து யாரும் தப்ப முடியாது. தீர்ப்பினை மாற்றியமைக்கும் அதிகாரமும் அரசாங்கத்தின் கையில் இல்லை.
மன்னர் பஹ்த் அவர்களின் புதல்வி இளவரசி மிஸ்ஸால் என்பவர் தனது 19ம் வயதில் விபரச்சாரக் குற்றம் புரிந்ததற்காக 1977 ஜுலை 15ல் மரண தண்டனைக்குள்ளானார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இது தவிரவும் குறித்த றிசானா நபீக்கின் விடயத்தில் சவூதி அரசாங்கத்தால் குழந்தையின் பெற்றோர்களிடத்தில் மன்னிப்பைப் பெறுவதற்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் அது வெற்றியளிக்கவில்லை. இது அந்த நாட்டின் நீதித் துறையானது எவரும் ஆதிக்கம் செலுத்த முடியாத முழு சுயாதீனமிக்க கட்டமைப்பு என்பதை காட்டுகின்றது.
அல்லாஹ்வின் நாட்டப்படி நடந்தேரிய இத்தண்டணையானது பல் வேறு விடயங்களை எமக்கு உணர்த்துகின்றது
- நீதித்துறையின் சுயாதீனம்
- வறுமையில் வாடும் போது கண்டுகொள்ளாத சமூகம் இப்போதுதான் றிஸானாவின் குடும்பத்தை கண்விழித்துப்பார்க்க ஆரம்பித்தருக்கின்றது
- போலி ஆவணங்கள் தயாரிப்பவர்கள் அதற்கு துணைபோகும் உத்தியோகத்தர்கள் சமூகத்திற்கு துரோகம் இளைப்பவர்கள்
- போலி ஆவணங்களை பெற்றுக்கொள்வதின் விபரீதம்
- பெண்கள் வெளிநாடு செல்வது தொடர்பான மீளாய்வும் அதற்கான சமூக காரணிகளை இனங்காணல்
- இனங்காணப்பட்ட பிரச்சினைகளுக்கான சமூகத்தீர்வுகள்
- கூட்டு ஸகாத்தின் முக்கியத்துவமும் ஏழைகளின் சுயதொழிலிற்கு போதுமான பங்கீட்டு முறையும்
- குடும்பச்சுமைகளை தாங்கிக்கொள்வதில் குடியிருப்பை அமைத்துக்கொள்வதிலும் ஆண்களிகன் கடமைப்பாடும் வகிபாகமும்
இறுதியாக இச்சிறு குறிப்பை நடு நிலமையாக தூய நோக்கோடு வாசிப்பவர்களுக்கு நியாயமானதாக அமையும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.
(kattankudyinfo)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.