அத்துடன், அவரிடமிருந்து 82 போலி கடவுச்சீட்டுக்களையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கையின் மனவக்கல் பகுதியைச் சேர்ந்த 32 வயதான ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தேவல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வழமையான வாகனச் சோதனையின்போது போலி கடவுச்சீட்டுகளுடன் இவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஈரான், ஈராக், எகிப்து போன்ற நாடுகளுக்கு போலி கடவுச்சீட்டுக்கள் மற்றும் விஸாக்களில் இலங்கையர்களை அனுப்பிவைக்கும் சென்னையிலுள்ள முகவர் ஒருவருக்கு தான் உதவி வருவதாக விசாரணையின்போது இவர் கூறியுள்ளார்.
இந்த முகவரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.