நேற்றுக்காலை சொலமன்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் 8 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நில அதிர்வைத் தொடர்ந்து சிறிய சுனாமி அலை சொலமன் தீவைத் தாக்கியது.
இதில் 5 பேர் உயிரிழந்ததுடன், 70 முதல் 80 வீடுகள் பாதிக்கப்பட்டதாக சொலமன்தீவின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். சுனாமிப் பாதிப்பு மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.
சொலமன்தீவை சுனாமி அலைகள் தாக்கியதைத் தொடர்ந்து நியூசிலாந்து, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு சுனாமி முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், இந்த எச்சரிக்கை பின்னர் நீக்கப்பட்டது.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.