......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 12 February 2013

காஷ்மீரில் 3வது நாளாக ஊரடங்கு: துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி


security-tightenedஅப்சல் குரு தூக்கிலிடப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில்,போராட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இதில் இரண்டு பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டில் தலையில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, காஷ்மிரில் பிறப்பிக்கட்ட ஊரடங்கு உத்தரவு இன்று 3வது நாளாக நீடிக்கிறது. பல இடங்களில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட பின்னர் காஷ்மிரில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில், 23 பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 50 பேர் காயமடைந்தனர்.


(kattankudyinfo.com)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE