......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 24 February 2013

கிழக்கு மாகாண சபையில் 19.02.2013 செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் ஆற்றிய உரை!

Ampara MPC (4)
கௌரவ தவிசாளர் அவர்களே இந்த சந்தப்பத்தில் ஹலால் சம்மந்தமாக இன்றைய விவாதத்தில் கலந்து கொண்டமைக்கு நான் மிகவும் பெருமைப்படுகின்றேன்.

ஏற்கனவே எனக்கு முன் பேசிய உறுப்பினர்கள் ஹலால் என்பது தொடர்பான மார்க்க விளக்கங்களையும் ஏன் எதற்காக விசயங்கள் இந்த ஹலால் ஏன் அவர்களுக்கு அத்தியவசியமாக தேவைப்படுகின்றது ஏன் அவர்கள் ஹலால் என்ற நடைமுறையினை பேணி பாதுகாத்து வாழ்ந்து வருகின்றார்கள் அதற்கான சுதந்திரம் இந்த நாட்டில் இருக்கின்றதா?
ஏன் அந்த சுதந்திரத்துக்கு இவ்வாறு இப்படி ஓரு அபகீர்த்தி அந்த ஒரு தடை இந்த சந்தப்பத்தில் ஏற்பட்டுள்ளது. அந்த தடையினை நீக்குவதற்கு அரசு என்ன செய்ய வேண்டும், இந்த மாகாண சபை என்ன செய்ய வேண்டும் என்ற விடயங்களை நாங்கள் இங்கு கலந்தாலோசித்து விவாதித்துக் கொண்டிருக்கின்றோம்.
இந்த சந்தப்பத்தில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையினரால் வழங்கப்பட்டிருக்கின்ற ஹலால் நியமம் கிட்டத்தட் 10 வருடங்களாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையினரால் வழங்கப்பட்டிருக்கின்றது. அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை என்பது என்னவென்பது நாங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
எமது கௌரவ உறுப்பினர் பிரியாந்த பத்திரன அவர்கள் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை போன்ற ஒரு சந்தேக கண்ணோடு பார்பதினால் தான் அவர் இவ்வாறான கருத்துக்களை கூற வருகின்றதோ என்றோ நான் அச்சப்படுகின்றேன்.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை என்பது இந்த நாட்டில் முஸ்லீம்களை வழி நடாத்துவதற்காக முஸ்லிம்களின் மார்க்க தொடர்பான விடயங்களை ஒழுங்கு படுத்துவதற்காக இந்த நாட்டினது பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட இரண்டாயிரமாம் ஆண்டின் 51ம் இலக்கத்தில் எமது பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்டத்தின் பிரகாரம் ஒரு கூட்டினைக்கப்பட்ட ஒரு சபையே இந்த அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை என்பதாகும்.
ஆகவே அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை அரசினால் வழங்கப்பட்ட அதிகாரங்களின்  பிரகாரம் பாராளுமன்றத்தின் கீழ் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தின் பிரகாரம் தனது நடவடிக்கைகளினை இந்த இலங்கை தீவில் இந்த நாட்டில் நடைமுறைப்படுத்திக் கொண்டு வருகின்றது.
இந்த அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையினது கணக்குகள் ஒவ்வொரு வருடமும் அங்கீகரிக்கப்பட்ட கணக்காளர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டு அது ஆய்வு செய்யப்பட்டு அந்த கணக்குகள் ஒழுங்காக வைப்பு செய்யப்பட்டுள்ளது.
அதே போல் இந்த அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை பல சந்தப்பங்களில் இனங்களுக்கிடையே முரண்பாடுகளும் இனங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளினைத் தீர்ப்பதற்கும் ஏன் எமது மார்க்கத்துக்குள்ளயே எமது சமயத்துக்குள்ளயே இந்த முஸ்லீம்கள் எனக் கூறப்படுகின்ற இந்த மக்களுக்கிடையே பல குழுமங்களாக பிரிந்து பிரிவினை வாதம் தேன்றுகின்ற  கால கட்டத்தில் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்துகின்ற ஒரு இந்த அரசியல் அமைப்பினையும் இந்த நாட்டின் சட்டங்களினையும் பேணிப்பாதுகாத்து நடக்கின்ற ஒரு குழுமமாகவே இந்த அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை நடந்து கொண்டிருக்கின்றது.
உண்மையிலேயே கூறப்போனால் ஹலால் என்ற நியமத்தினை இந்த அரசு நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டும். எமது அரசினால் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தின் மூலம் எமது அரசு அரசின் அந்தஸ்தின் மூலம் எமது அரசின் கீழ் வருகின்ற ஒரு தினைக்களத்தில் மூலம் இந்த ஹலால் நியமம் என்பது எமது அரசின் மூலம் வழங்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு அவசியமாக இருந்து கொண்டிருக்கின்றது.
அந்த சந்தப்பத்தில் அவ்வாறு இந்த அரசு அந்தக்காரியத்தினை நடைமுறைப்படுத்தாததினால் தானாகவே இந்த முஸ்லிம் மக்கள் தாங்கள் நம்புகின்ற மார்க்கத்தினால் கட்டளையிடப்பட்டுள்ள தாம் இறைக்கட்டளை  என நம்புகின்ற ஒரு விடயதானத்தின் படி அந்த இறை கட்டளையினை அனுஸ்டித்து நடப்பதற்கு ஆவன செய்ய வேண்டும் என்ற கருத்திலேயே ஹலால் சான்றிதழ் என்ற நடைமுறை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையினால் கொண்டு வரப்பட்டது.
இந்த அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை எந்த வித தண்டனை சட்டக்கோவையினையோ எந்த வித சட்டப்பினைகளையோ இந்த ஹலால் ஊநசவகைiஉயவந எடுக்கப்படாவிடின் அவர்களுக்கு தன்டனை வழங்கப்பட வேண்டும் என்றோ அல்லது அவர்களது பொருற்களை பகிஷ்கரிக்க வேண்டும் என்றோ எந்த சந்தப்பத்திலும் இந்த ஜம்மியத்துல் உலமா சபை எந்த ஒரு அறிவித்தலையும் மேற்கொள்ள வில்லை என்பதினை நான் கௌரவ தவிசாளர் அவர்களுக்கு கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
இந்த ஹலால் யினை வழங்குவதினால் என்ன நடக்கின்றது என்பதினை நீங்கள் பார்த்து கொண்டிருங்கள். முஸ்லீம்கள் தாங்கள் இறை கட்டளையின் பிரகாரம் உண்ண வேண்டும் தாங்கள் இறை கட்டளையின் பிரகாரம் வாழ வேண்டும் என்ற நியதிக்கு அமைய அந்த இறை கட்டளையின் பிரகாரம் அறுக்கப்பட்ட பிராணிகளின் அந்த உணவுகளை உண்ண வேண்டும் என்பதற்காக முஸ்லிம்களின் முஸ்லீம் வர்த்தகர்களினால் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையங்கிளை வர்த்தக ஸ்தாபனங்களை நாடிச் செல்லக்கூடிய காலகட்டம் இருந்தது.
அந்த கால கட்டம் தனிக்கப்பட்டு அனைத்து மக்களும் அனைத்து வியாபாரிகளினாலும் அனைத்து வியாபார நிலையங்களும் ஏன் சிங்களவர்களாலும், இந்துக்களினாலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வியாபார நிலையங்களிலும் தைரியமாக அந்த ஹலால் இருக்கின்ற சந்தர்ப்பத்தில் முஸ்லீம்கள் அங்கு போய் தங்களுடைய பொருட்களை வாங்கிக் கொள்வதன் மூலம் அனைவருக்கும் அந்த வியாபாரம் பங்கு போட்டுக் கொண்டிருக்கின்றது.
இந்த சந்தப்பத்தில் கௌரவ தவிசாளர் அவர்களுக்கு நான் ஒன்றினைக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். தாய்லாந்து என்ற ஒரு நாடு எமது கௌரவ உறுப்பினர் அமீர் அலி கூறினார்கள். தாய்லாந்தில் தான் இந்த ஹலாலுக்குறிய தலமை அலுவலகம் இருந்து கொண்டிருக்கிறது எனக் கூறினார்கள். தாய்லாந்து என்ற நாடு என்ன நாடு? 95% பௌத்த மக்களைக்  கொண்ட நாடுதான் இந்த தாய்லாந்து எனும் நாடாகும். இந்த தாய்லாந்து நாட்டில் 1946 ம் ஆண்டிலிருந்து இன்று கிட்டத்தட்ட 70 வருடங்களாக ஒரு மன்னர்; ஆட்சி செய்து வருகின்றார்.
அந்த மன்னர் கிட்டத்தட்ட 60, 70 வருடங்களாக அங்கு ஆட்சி செய்து வருகின்றார். எவ்வாறு நமது அரசியல் அமைப்பு உறுப்புரை 09ல் பௌத்த மதத்துக்கு எவ்வாறு முன்னுரிமை கொடுக்கப்பட்டதோ அவ்வாறே தாய்லாந்திலும் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு அந்த அரசர் பௌத்த மதத்தை பாதுகாக்கக் கூடிய அரசர் என்று அந்த அரசர் வர்ணிக்கப்படுகின்றார்.
ஆனால் அந்த தாய்லாந்தில் 1948ல் முதன் முதலாக ஹலால் ஊநசவகைiஉயவந என்ற கோழிகளை அறுக்கும் பொழுது இஸ்லாமிய முறைப்படி அறுக்க வேண்டும் என்று அங்கிருந்த உநவெநச கழச ஐளடயஅiஉ எனப்படுகின்ற ஒரு நிறுவணத்தின் மூலம் எமது அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை போன்று அங்கிருந்த ஒரு இஸ்லாமிய குழுமம் அதைச் செய்தது.  1998ம் ஆண்டு அந்த அரசு ஹலால் வழங்க வேண்டும் அரசு முன்வந்து செய்தது.
2001ம் ஆண்டு இந்த தாய்லாந்து நாட்டி ஹலால் எப்படி  வழங்கப்படும் என்று 2001ம் ஆண்டில் ஏற்பாடு செய்கின்றது. 2002ம் ஆண்டு அதாவது தாய்லாந்தின் தென் பகுதியில் ஒரு மாகாணத்தினையே ஹலால் உணவையே உற்பத்தி செய்ய வேண்டிய ஒரு வலயம் என பிரகடணப்படுத்துகின்றது.
அத்தோடு எமது தவிசாளர் அவர்களே இந்த நாடு எமக்கு பூரண சுதந்திரம் அளித்துள்ளது. எமக்கு என்ற ஒரு சட்டத்தினை இந்த நாடு தந்தது. நாங்கள் விவாகம் என்பது செய்ய வேண்டும் விவாகரத்து என்பதும் செய்ய வேண்டும் பிணக்குகளை விசாரிப்பதற்கு என்று நீதி ஸ்தாபனத்தினையே எமது அரசு ஸ்தாபித்து தந்துள்ளது.
அதற்கு நாங்கள் எமது அரசுக்கு நன்றி கூற வேண்டும். எமக்கு என்று காதிகள் நீதிமன்றம் அதனை விசாரிக்கவென்று காதிகள் நீதிபதிகள் சபை, எமது பள்ளி வாசல் பிணக்குகள் வந்தாள் அதனை விசாரிப்பதெற்கன வக்கு சபை போன்றவற்றினை இந்த அரசு எமக்கு ஏற்படுத்தி தந்துள்ளது.
எனவே ஏன் இந்த பௌத்த மக்கள் பொதுபல சேனா போன்ற ஒரு தீவிரவாதக் குழுமம் இந்த ஹலால் க்கு எதிரான இந்த அநீயாயமான பிரேரனையைக் கொண்டு வருகின்ற போது இந்த நல்ல பௌத்த மக்கள் ஏன் அமையாக இருந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள்; கொதித்து எழ வேண்டாமா? அவர்கள் தந்த சுதந்திரம் பறிக்கப்படுகின்றது.
எனவே எமது கௌரவ உறுப்பினர்; பிரியாந்த பத்திரன அவர்கள் கூறியதை வாபஸ் வாங்க வேண்டும். ஏனெனின் ஊவா வெள்ளஸ்ஸ குழப்பம் ஏற்பட்ட பொழுது ஊவா வெள்ளஸ்ஸ கெபிடிபொலே திசாவே அவர்களை காட்டிக் கொடுத்தவர்கள் முஸ்லீம்கள் அல்ல எகலபொலே திசாவே அவர்களே.
ஆகவே எமது இதிகாசம் எமது சரித்திரம் என்ன கூறுகின்றது? என்றாவது நெய்னா மரைக்கார் என்ற ஒரு முஸலீம் கெபிடிபொல திசாவையை காட்டிக் கொடுத்ததாக சரித்திரம் இருக்கின்றதா? ஊவா வெல்லஸ்ஸயில் அந்த அதிகாரி வெள்ளையர்களினால் வெட்டப்பட்ட பொழுது அவரை காட்டிக் கொடுத்தவர் யார்? இதனை நீங்கள் நினைவு கூற வேண்டும்.
ஊவா வெல்லஸ்ஸவில் முஸ்லீம்கள் காட்டிக் கொடுக்கவில்லை. எந்த சந்தப்பத்திலும் நீங்கள் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த முஸ்லீம்கள் என்பது சங்கிலியில் இருக்கின்ற இணைப்பு போன்றவர்கள்.
இந்த நாடு ஒரு சங்கிலி எனக் கருதினால் அந்த சங்கிலில் இருக்கின்ற இணைப்பு  தான் இந்த முஸ்லிம் சமூகம். இரண்டு இனத்தினையும் பௌத்த பெரும்பான்மையினையும் இணைக்கின்ற இணைப்பு பாலமாக இந்த முஸ்லீம்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.
எமது நாடு ஒற்றுமையாக ஒரு நாடாக விளங்கினால் தான் நாங்களும் நிம்மதியாக வாழ முடியும் சிங்களவர்கள் நிம்மதியாக வாழ முடியம் தமிழர்கள் நிம்மதியாக வாழ முடியும். இது பௌத்த நாடு என்ற ஒரே ஓரு காரணத்துக்காக ஓரு ஹலால் என்ற அடிப்படை உரிமையினை முஸ்லிம்களுக்கு மறுக்க முடியாது.

(மூலம்: http://metromirror.lk/?p=13756 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE