......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 2 February 2013

டொல்பின்களை கொன்ற மீனவர்கள் 15 பேர் கைது

மீன்பிடிக்கு தடைச்செய்யப்பட்ட லைலா வலையை பயன்படுத்தி டொல்பின் மீன்களை பிடித்து  கொன்ற குற்றச்சாட்டின் பேரில் மீனவர்கள் 15 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


கற்பிட்டி, பத்தலகுண்டு கடற்பரப்பில் பெருமளவான டொல்பின் மீன்கள் மரணமாகியமை குறித்து  விசாரணை நடாத்திய போதே இந்த 15 மீனவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

டொல்பின் மீன்களை பிடிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட மீன் பிடிப்பதற்கே தடைச்செய்யப்பட்ட லைலா வலைகள் மற்றும் மீன்பிடி படகுகள்  ஆறு ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

இறந்த நிலையில் நூற்றுக்கணக்கான டொல்பின்கள் கடலில் மிதந்துக்கொண்டிருப்பதாக ஏனைய மீனவர்கள் வழங்கிய தகவலையடுத்தே பொலிஸார் இந்த மீனவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.



(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE