By Kavinthan Shanmugarajah
மேர்வின் சில்வாவை களனி தொகுதியின் அமைப்பாளராக மீண்டும் நியமிக்கும் படி ஜனாதிபதிக்கு வலியுறுத்தி கையெழுத்து வேட்டையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களனிப் பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர் இணைந்து அப்பகுதியில் இந் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேர்வின் சில்வா மிகவும் நல்லவர் என்பதுடன் மிகவும் திறமையானவர் எனவே அவரை உடனடியாக அப்பதவிக்கு நியமிக்கும்படி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் களனிப் பிரதேசத்திற்கான பெண்கள் பிரிவின் தலைவி தமயந்தி பெரேரா தெரிவித்துள்ளார்.
அவர் எப்போதும் பெளத்த தர்மத்தின் நற்சிந்தனைகளுடனே எமக்கு அறிவுரை கூறுபவர் எனவும் அவர் கொலைகாரர் அல்ல எனவும் தமயந்தி பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
களனிப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இக் கைழுத்து வேட்டை இடம்பெற்றுவருவதாகவும் இதில் ஏற்கனவே நூற்றுக் கணக்காணோர் கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
(virakesari)

No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.