......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 22 January 2013

வெலிமடை பிரதேச சபையின் நிர்வாகம் ஆணையாளரிடம்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழுள்ள வெலிமடை பிரதேச சபையின் நிர்வாகம் ஊவா உள்ளூராட்சிமன்ற ஆணையாளரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.


ஊவா மாகாண முதலமைச்சர் ஷசிந்திர ராஜபக்ஷவினால் அந்த சபையின் நிர்வாகம் கைவிடப்பட்டுள்ளதுடன், அந்த சபையின் நிர்வாகத்தை பரிசீலனை செய்வதற்காக ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி சுனில் காமினி பிரான்சிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக நிலவிய முறையற்ற நிர்வாகத்தினால் குறித்த பிரதேச சபையில் எந்தவொரு அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்படவில்லை.

ஆகையினால், பிரதேச சபையின் தலைவர் ஆர்.எம். அபேரத்ன அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு அந்தச்சபையின் நடவடிக்கை ஊவா உள்ளுராட்சிமன்ற ஆணையாளர் நிஷாந்த மொஹான் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE