-எஸ்.மாறன்
அம்பாறை மாவட்டத்தில் பெய்த மழையால் திருக்கோவில் கஞ்சிகுடியாறு வேப்பையடிக்குளம் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இரவு உடைப்பெடுத்துள்ளது.
இதனால் 250 ஏக்கர் வேளாண்மை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் தெரிவித்தார்.
உடைபெடுத்துள்ள இக்குளத்திலிருந்த நீர் முற்றாக வெளியேறியுள்ளது.
உடைபெடுத்த இக்குளத்தை நேற்று செவ்வாய்க்கிழமை சென்று பார்வையிட்ட பிரதேச செயலாளர் தலைமையிலான குழுவினர்,
மாவட்ட செயலர் மற்றும் நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.