கே. அசோக்குமார், எம். எஸ். பாஹிம்எதிர்க்கட்சித் தலைவர் சபையில் ஒழுங்குப் பிரச்சினை
சட்டவாக்கத்துறைக்கும் நீதித்துறைக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலை முடி வுக்கு கொண்டுவரும் வித த்தில் மோதல் தவிர்ப்பு நட வடிக்கையொன்றிற்கு தலை யிடுமாறு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம்
எதிர்க் கட் சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க நேற்று வேண்டுகோள் விடுத்தார். பாராளுமன்றத்தில் ஒழுங்குப் பிரச்சி னையொன்றை முன்வைத்த எதிர்க் கட்சித் தலைவர் மேலும் கூறிய தாவது; நீதிமன்றத்திற்கும் பாராளுமன்றத்திற்குமிடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. இது உகந்த நிலைமை அல்ல. எனவே, எதிர்வரும் இரு தினங்களிலும் இதற்கு தீர்வு காணும் வகையில் தலையிடுமாறு சபாநாயகரை கோருகிறேன்.
பிரச்சினையை மேலும் காலங்கடத்தாது நீதிபதிகள் ஊடகங்கள் என்பவற்றுடன் பேசி இணக்கப்பாடொன்றை எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஹிந்து பத்திரிகையிலும் மற்றொரு பத்திரிகையிலும் வெளியான செய்தி மூலம் எமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. பிரதம நீதியரசருக்கு எதிரான விசாரணை யில் ஐ. தே.க. எம்.பி. கள் பங்கேற்க வில்லை எனவும் எமது எம். பிகள் நீதி மன்றத்தில் ஆஜராவதை நான் தடுத்த தாகவும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. எனது எம்.பிகளுக்கு நீதிமன்றத்தில் ஆஜராகக்கூடாது என ஒருபோதும் தடுக்கவில்லை. ஐ.தே.க எம்.பிகளுக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருக்க வில்லை. இது பாராளுமன்றத்தின் அதிகாரத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையின் ஒரு அங்கமாகும்.
உச்ச நீதிமன்ற நீதியரசர் அமரதுங்க வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக செல்ல நாம் தயாராகவில்லை. நீதியரசர் அமர துங்கவின் தீர்ப்பை நாம் ஏற்க வேண்டும். தீர்ப்பு எதுவாக இருந்தாலும் இந்த நடவடிக்கையை தொடர்ந்து முன்னெ டுப்பதாக அரசாங்கம் கூறியுள்ளது.
பிரதமநீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை உரிய முறைப்படி முன்னெ டுக்கப்படவில்லை. நாம் ஒரு நிலைப் பாட்டிலே உள்ளோம். அரசியலமைப்பு தொடர்பிலான நெருக்கடி நிலை ஏற் பட்டுள்ளது. இது தொடர்பில் தலையீடு செய்து இணக்கப்பாடொன்றை ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பில் தலையீடு செய்து தீர்ப்பு வழங்குவீர்களென எதிர்பார்க்கிறோம் என்றார்.
இது தொடர்பான விவகாரத்தை சிறப்புரிமை குழுவுக்கு முன்வைப்பதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அறிவித்தார்.
கட்சித் தலைவர்கள் கூட்டம்
இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில்; பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பான விவாதம் குறித்து ஆராய, கட்சித் தலைவர்கள் கூட்டத்தை மீண்டும் கூட்டுமாறு கேட்டுள்ளார்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.