2013ஆம் ஆண்டுக்கான சட்டக் கல்லூரி அனுமதி பரீட்சை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் முழு நாள் விவாதமொன்றை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
"இது ஒரு பாரிய பிரச்சினையாக நாட்டில் இன்று ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த பிரச்சினை தொடர்பில் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும்" என அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் சட்டக் கல்லூரி அதிகாரிகளினால் கோரிக்கை விடுக்கப்பட்டால் புதிதாக பரீட்சை நடத்த தயார் என பரீட்சைகள் ஆணையாளர் இணங்கியுள்ளதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பில் விவாதம் நடத்துவதற்கு நீதி அமைச்சர் ஹக்கீமும் இணக்கம் தெரிவித்துள்ளார்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.