......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 10 January 2013

நாடாளுமன்றில் அரசு பதுங்கு குழியமைத்தால் நாம் வீதிகளில் அமைப்போம்: விக்கிரமபாகு


-மேனகா மூக்காண்டி 

'ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல் மீதேறிக்கொண்டுள்ளவர்கள் நாடாளுமன்றத்தை ஓர் பதுங்கு குழியாக்கியுள்ளனர். இந்த அரசாங்கம், நாடாளுமன்றத்துக்குள் பதுங்கு குழிகளை அமைத்தால் நாம் வீதிகளில் பதுங்கு குழிகளை அமைத்து இந்த அரசாங்கத்துக்கு எதிராகப் போராடுவோம்' என்று புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன கேள்வி எழுப்பினார். 

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 


'பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பில் விசாரணை நடத்திய நாடாளுமன்ற தெரிவுக்குழு விடுத்த அறிக்கை முழுமையற்றது. அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாமலேயே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை செல்லுபடியற்றது என நீதிமன்றமும் தீர்ப்பளித்துவிட்டது. இந்நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஏற்க முடியாது என நாடாளுமன்றம் கூற முடியாது. 

சட்டத்தை மாற்றுவதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உண்டு. இருப்பினும் பிடிவாதத்துடன் செயற்பட முடியாது. இவ்வாறானதொரு நிலையில், இந்த விவகாரம் தொடர்பிலான சபாநாயகரின் கருத்து என்ன என்பதே எமது கேள்வியாதும். 

நாடாளுமன்றம் தனது பொறுப்பில் இருந்து மீறிச் செயற்படுகின்றது. ஜனாதிபதியின் தோல் மீது ஏறிக்கொண்டு நாடாளுமன்றத்தில் பதுங்கு குழிகளை அமைத்து வருகின்றனர். அவர்கள் நாடாளுமன்றத்துக்குள் பதுங்கு குழிகளை அமைத்தால், நாம் வீதிகளில் பதுங்கு குழிகளை அமைக்க எமக்கும் நேரிடும். 

அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் சர்வதேசத்தின் முன் பாசாங்கு காட்டி வரும் இந்த அரசாங்கம் உள்நாட்டுக்குள் சதி செய்கின்றது. இந்த சதிக்கு பிரதம நீதியரசரை பலிக்கடாவாக்குகின்றது. நிதியரசர் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் பலவந்தமானதொரு விவாதம் இடம்பெறுமாயின் நாம் இந்த அரசாங்கத்துக்கு எதிராகப் பாரிய போராட்டத்தை முன்னெடுப்போம். 

நீதிமன்றத்தில் தோல்வியுற்றவர்கள் அரச வீட்டின் அனுமதியுடன் நாடகம் போட்டு வருகிறார்கள். கோல்டன் கீ ஊழல் மோசடிக்கு இந்த அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும். ஆனால், பிரதம நீதியரசரின் வீட்டுக்குள் முன்னால் அமர்ந்துகொண்டு நாடகம் போடுகிறார்கள்' என்றார். (படப்பிடிப்பு - நிசல் பதுகே)







(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE