முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப் பிரேரணை விடயத்தில் அதிருப்தி தெரிவித்திருக்கும் நவநீதம்பிள்ளைக்கு உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பில் விளக்கமளித்து இலங்கை அரசாங்கம் நேற்று உத்தியோகபூர்வ கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளது.
அரசாங்கத்தின் அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே அனைத்துச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட் டுள்ள நிலையில் நாட்டின் இறைமை க்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக் குழு அதிருப்தி வெளியிட்டிருப்பது மிகுந்த கவலை யளித்துள்ளதெனவும் இலங்கை அரசாங்கம், ஐ. நா. உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளைக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை அரசாங்கம் ஜெனீவா விலுள்ள நவநீதம் பிள்ளைக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அவர் அதிருப்தி வெளியிட்டிருந்த ஒவ்வொரு கருத்துக்க ளுக்குமான பூரணப்படுத்தப்பட்ட விளக்கங்கள் தெளிவுபடுத்தப்பட் டிருப்பதாகவும் அமைச்சின் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவரப்பட்ட விடயம் முழுமையாக உள்நாட்டு விவகாரம் எனக் குறிப்பிட்டுக் காட்டியுள்ள அர சாங்கம், இது தொடர்பில் ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழு அதிருப்தியை வெளியிடுவதற்கு முன்பாக ஜெனீவாவிலுள்ள எமது நிரந்தர வதிவிட பிரதிநிதியிடம் இது தொடர்பில் விளக்கம் கோரியிருக்கலாம் என்றும் நவநீதம் பிள்ளைக்கான கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
அவ்வாறு செய்யாது நேரடியாக அதிருப்தி தெரிவித்திருப்பது நாட்டின் இறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் பிரதம நீதியரசர் ஒருவர் பதவி விலக்கப்படும் முறைமையினை நவநீதம் பிள்ளை அறிந்து வைத்திராமை கவலையளித்திருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ கடிதத்தில் முன்னாள் பிரதம நீதியரசர் அவரது உத்தியோகபூர்வ வீட்டிலிருந்து வெளியேறியமை மற்றும் சட்டத்தரணிகளுக்கு எதிராக விடுக்கப்படுவதாக கூறப்படும் கொலை அச்சுறுத்தலுக்கான விசாரணை ஆகியன உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளைக்கு இலங்கை அரசாங்கம் தகுந்த விளக்கத்தை வழங்கியுள்ளது.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.