......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 22 January 2013

இலங்கை பற்றி கொள்கையை இந்தியா மாற்றிக்கொள்ள வேண்டும்: சுரேஷ் எம்.பி

இலங்கை அரசாங்கம், தமிழர்களின் நியாயமான அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றாதிருப்பதை ஊக்குவிக்கும் வகையில் இலங்கை தொடர்பான இந்திய அரசாங்கத்தின் தலையிடாக் கொள்ளை அமைந்துவிட்டதாக தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், இந்தியா, இலங்கை பற்றி தனது கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டுமெனவும் கூறியுள்ளார். 


தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாத நிலையில் இலங்கை தொடர்பான தனது கொள்கையை புதிய நிலைமைக்கேற்ப இந்தியா மாற்றியமைத்துக்கொள்ள வேண்டுமென அவர் கூறியுள்ளார். 

இது தொடர்பில் சுரேஷ் எம்.பி மேலும் கூறியுள்ளதாவது, 

புலிகளுக்கு எதிரான யுத்தத்தின்போது இந்தியா இரகசியமாகவும் வெளிப்படையாகவும் இலங்கைக்கு ஆதரவளித்தது. யுத்தம் முடிந்த பின், தமிழ் சமுதாயத்தின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது தொடர்பாக இந்திய தலைவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை இலங்கை மீறியுள்ளது. 

சீனாவின் ஆதரவு கிடைப்பதனால் ஜனநாயக நாடுகளுக்கு எதிராக நிற்கும் துணிவை இலங்கை பெற்றுள்ளது. இலங்கை அரசாங்கம் அமெரிக்காவையோ ஐரோப்பாவையோ கணக்கில் எடுப்பதில்லை. தம்மால் இந்தியாவையும் சமாளிக்க முடியுமென அவர்கள் கூறுகின்றனர். 

சீனா தம்மோடு நிற்பதனால் ஐ.நா.வையும் சமாளிக்க முடியுமென அவர்கள் நினைக்கின்றனர். உட்கட்டமைப்பு விருத்திபற்றி அவர்கள் பெரிதாக கூறுகின்றனர். ஆனால், வீதிகள் அமைக்கப்படுவதும் மீள் வழங்கப்படுவதும் இராணுவ முகாம்களுக்காகவே தமிழர்கள் இவற்றால் நன்மையடைவதில்லை. 

புலிகளோடு இருந்தவர்களுக்கு புனர்வாழ்வு அளித்து விடுத்த பின்னர்  இப்போது அமீண்டும் அவர்களை கைது செய்கின்றனர். எங்கு பார்த்தாலும் இராணுவ சோதனைச்சாவடிகள் காணப்படுகின்றன. 

துமிழ் இளைஞர்களை அரசாங்கம் துரத்திவிட நினைக்கின்றது. தமிழர்கள் யாவரும் சந்தேக நபர்களாக்கப்பட்டுள்ளனர். இதை நாம் கூறினால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதையும் பெரிதுபடுத்துவதாக கூறிகின்றனர். வடமாகாணம் பலஸ்தீனம் போல ஆகிவிட்டது. அது எதிரிகளிடமிருந்து பிடிபட்ட இடமாகிவிட்டது.

துமிழ்த் தலைவர்களையும் இலங்கை அரசாங்கத்தையும் ஒன்றுபட வைக்கும் தென்னாபிரிக்காவின் முயற்சிக்கு இலங்கை ஆதரவளிப்பது போல காட்டில் சர்வதேச சமூகத்துக்கு தாம் பிரச்சினையை தீர்க்க விரும்புவது போல காட்டுவதற்கு மட்டும் தான் என நாம் நம்புகின்றோம். 

இலங்கை அரசாங்கம் தமிழ் பிரதிநிதிகளுடன் மனப்பூர்வமாக பேசுவதில்லை என்பதே உண்மை. ஆவர்கள் எம்மோடு பேச விரும்பவில்லை. நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் எமது பிரச்சினைகளை முன்வைக்கும்படி கூறுகின்றனர். 

ஆனால், இந்த குழு சிங்கள கட்சிகளின் ஆதிக்கத்தில் உள்ளது. அவர்கள் எமக்கு எதையும் தரப்போவதில்லை. நேரிடையாக கூறினால் இதய சுத்தியோடு அவர்கள் பேச விரும்புவதில்லை' என்று அவர் மேலும் கூறியுள்ளார். 




(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE