......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 13 January 2013

நீதிமன்றத்தினால் பாராளுமன்றத்திற்கு ஒருபோதும் சவால் விட முடியாது


ஆதரவாக வாக்களித்தமைக்கு அமைச்சர் ஹக்கீம் விளக்கம்

பாராளுமன்றத்திற்கு “ரிட் ஆணை” பிறப்பிக்கும் அதிகாரம் நாட்டின் நீதித்துறைக்கு கிடையாது என்றும், பிரதம நீதியரசருக்கு எதிரான பதவிநீக்க பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டத்தின்படி, பாராளுமனற்த்திற்கோ அல்லது அதன் தெரிவுக்குழுவுக்கோ ரிட் ஆணை பிறப் பிக்கின்ற அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இல்லை என்றும் அந்த சட்ட ஏற்பாடு அரசியலமைப்பின் 67ஆம் பிரிவில் உள்வாங்கப்பட்டிருப்பதாகவும் நீதியமைச்சர் பாராளுமன்ற விவாதத்தில் சுட்டிக்காட்டினார்.
பிரதம நீதியரசர் மீதான நாடாளு மன்றத் தெரிவுக்குழு செல்லாது, அதன் அறிக்கையும் செல்லாது என்ற மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பைக் காட்டி நாடாளுமன்றத்தில் குற்றப் பிரேரணை விவாதத்தை நடத்தக்கூடாது என்று முன்வைக்கப்பட்ட வாதம் தவறானது என்றும் ரவூப் ஹக்கீம் வாதிட்டார்.
நாடாளுமன்றமே மக்களின் நீதி அதிகா ரத்தை நீதிமன்றங்களுக்கு வழங்குவதாகவும், நீதிமன்றம் அடிப்படை அற்ற தீர்ப்புகளை வழங்கும்போது அந்த தவறான தீர்ப்புகளை விமர்சிக்கும் சுதந்திரம் நாடாளுமன்றத்திற்கு இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தாம் ஆரம்பத்திலிருந்தே நீதித்துறை - சட்டவாக்கத்துறை இடையிலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பல முயற் சிளை எடுத்திருந்ததாகவும், ஆனால் இப் போது பிரதம நீதியரசருக்கு எதிரான பதவிநீக்க பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்றும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மேலும் குறிப்பிட்டார்.



(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE