நாட்டில் உள்ளாசத்துறையை அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய தனியார் துறையினரும் பல்வேறு முதலீடுகளைச் செய்து வருகின்றனர் இதன் அடிப்படையில் லாப் லெசர் (Lafe Leisure) நிருவனத்தினால் லாப் ரிசோட் (Lafe Resort) எனும் பெயரில் ஹோட்ல் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு (21.01.2013) திங்கள் கிழமை இடம் பெற்றது.
பாசிக்குடாவில் 13வது உள்ளாச ஹோட்டலாக அமையப் பெறவுள்ள லாப் ரிசோட் (Lafe Resort) ஹோட்டலில் குளிரூட்டப்பட்ட அரைகள் குளிரூட்டப்படாத அரைகளுமாக மொத்தம் 110 அரைகள் அமைக்கப்படவுள்ளதுடன் நீச்சல் தடாகம், உடற் பயிற்சி கூடம் என பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்படவுள்ள இக் ஹோட்டல் 18 மாதங்களில் பூர்த்தியாக்கப்படும் என்று நிருவாகப் பணிப்பாளர் யூ.கே.திலக் டி சில்வா தெரிவித்தார்.
லாப் லெசர் (Lafe Leisure) நிருவனத்தின் தலைவர் டபள்யூ.கே.எச்.வேகபிட்டிய, நிருவாகப் பணிப்பாளர் யூ.கே.திலக் டி சில்வா, பணிப்பாளர் ஸ்ரீலால் மித்;திரபால, முகாமையாளர்களான அஜித் குமாரகே, பீட்டர் குணசேகர, வசந்த சில்வா ஆகியோரும் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.
(kattankudy)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.