By M.D.Lucias
பிரதேச சபை உறுப்பினர்கள் பலர் உட்பட நானும் கொலை அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருகின்றேன் என களனி பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன ரனவீர தெரிவித்துள்ளார்.
இது குறித்து தாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அறிவித்துள்ளதாகவும் அதற்கு ஜனாதிபதி, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் களனி பிரதேச சபை உறுப்பினரான ஹசித்த மடவலவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்பு பட்ட சந்தேக நபரை கண்டறிவதோடு இது போன்ற செயல்கள் இனி நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அரசியல் நோக்கத்திற்காக கொலை செய்யப்பட்ட ஹசித்த மடவல கொலை சம்பம் முதலும் இறுதியுமானதாக இருக்கவேண்டும். எனினும் ஏனைய பிரதேச சபை உறுப்பினர்களின் பாதுகாப்பில் கேள்விக்குறியே உள்ளது என்றார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் களனி பிரதேச சபை உறுப்பினரான ஹசித்த மடவல, கடந்த 5 ஆம் திகதி மாலை 7.30 மணியளவில் அவரின் வீட்டுக்கு அருகாமையில் வைத்து இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இலக்காகி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
(tamilmirror)

No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.