......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 31 January 2013

மாலி கிளர்ச்சியாளர் வசமிருந்த கடைசி நகருக்குள் நுழைந்தது பிரான்ஸ் படை


மாலியில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் கடைசி நகரான கிடாலுக்குள் நுழைந்ததாக பிரான்ஸ் படை அறிவித்துள்ளது. இதில் பிரான்ஸ் படை வடக்கு மாலியின் கிடால் நகரின் விமான நிலையத்தை கைப்பற்றியுள்ளது.

அங்கு ஒரு சில விமானங்களும் இருந்துள்ளன. எனினும் கிடால் நகரை விட்டு இஸ்லாமிய ஆயுத தாரிகள் ஏற்கனவே வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் நகர் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது பற்றி உறுதிப்படுத்தப்படவில்லை.
எந்த மோதலும் இன்றியே பிரான்ஸ் படை கிடால் நகருக்குள் நுழைந்துள்ளது. இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களின் பிரதான போராளிக் குழுவான அன்சார் தினின் தலைவர் இயாத் அக் காலி மற்றும் அல் கொய்தா பிரிவின் தலைவர் அபு சைத், கிடால் நகரின் வடக்கு மலைப்பிரதேசத்தை நோக்கி நகர்த்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இம்மாத ஆரம்பத்தில் மாலியில் இராணுவ தலையீட்டை மேற்கொண்ட பிரான்ஸ் கிடால் நகரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் மூலம் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களின் கைவசம் இருந்த வடக்கு மாலி முழுவதையும் விடுவித் துள்ளது. எனினும் இது முதல் சுற்று இராணுவ நடவடிக்கையாகவே கருதப்படுகிறது. அடுத்து பாலைவனப் பகுதியில் மறைந்திருக்கும் போராளிகளை முறியடிப்பது சவால் மிகுந்தது என கூறப்படுகிறது.



(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE