......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 14 January 2013

புதிய பிரதம நீதியரசருக்கு எதிராக 'ரீட் ஆணையை' பெறுவோம்: சட்டத்தரணிகள்


-அழகன் கனகராஜ்

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பதவிநீக்குவதற்கான அறிவித்தலை மீளப்பெறுமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ள சட்டத்தரணிகளின் கூட்டிணைப்பு அரசியலமைப்பிற்கு முரணாக சட்டவிரோதமாக நியமிக்கப்படும் புதிய பிரதம நீதியரசருக்கு எதிராக ரீட் ஆணை பெற்றுக்கொள்ளப்படும். என்றும் அறிவித்துள்ளது.

நிப்போன் ஹோட்டலில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்ட சட்டத்தரணிகளின் கூட்டிணைப்பைச்சேர்ந்த  சட்டத்தரணிகளே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

அங்கு அவர்கள் மேலும்  தெரிவிக்கையில்,

குற்றப்பிரேரணை மற்றும் அதன் செயன்முறை தொடர்பில் உயர்நீதிமன்றமும் மேன்முறையீட்டு நீதிமன்றமும் அறிவிப்புகளை வழங்கியிருந்தன. எனினும் குற்றப்பிரேரணை நடவடிக்கை அரசியலமைப்பிற்கு முரணாகவே முன்னெடுக்கப்பட்டது.

சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் கீழ் பிரதம நீதியரசரை சட்டவிரோதமாக நீக்கிவிட்டு புதிய நீதியரசரை நியமிப்பது சட்டவிரோதமானதாகும்.

அந்த  நியமனத்தை வழங்கும் நடவடிக்கையானது சட்டவிரோதமானதாகும். நிறைவேற்று அதிகாரம் கொண்டவரே இவ்வாறான சட்டவிரோத நியமனத்தை வழங்கிவைக்கின்றார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்லமுடியாது. எனினும் அவரினால் நியமிக்கப்பட்ட சட்டவிரோத அல்லது தகுதியில்லாத நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தி அதற்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்லமுடியும்.

சட்டவிரோத நியமனத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கை தாக்கல் செய்யமுடியும். இன்றேல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் ஆணையை பெற்றுக்கொள்ள முடியும். என்றும் அறிவித்தனர்.படங்கள்: பிரதீப் பத்திரன





(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE