......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 15 January 2013

கோடிக்கணக்கான இந்துக்கள் குவிந்த கும்பமேளா!: உலகில் அதிகமானோர் குவிந்த நிகழ்வாகவும் பதிவு


By Kavinthan Shanmugarajah இந்தியாவில் இந்துக்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாகக் கருதப்படும் மகா கும்பமேளாவில் நேற்று தொடங்கியது.

இம்முறையும் இதில் கோடிக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும் கோடிக்கணக்கானோர் தொடர்ச்சியாக அங்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்து சமயத்தினரால் ஒவ்வொரு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பமேளா அலகாபாத்தில் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை அரை கும்பமேளா கொண்டாடப்படுகின்றது.
மகா கும்பமேளாவே உலகில் அதிகளவு மக்கள் ஒன்று கூடும் திருவிழாவாகத் திகழ்கின்றது.
இத்திருவிழாவானது எதிர்வரும் மார்ச் மாதம் வரை 55 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
மகா சங்கராந்தி தினத்தில் தொடங்கும் இந்நிகழ்வு, மகாசிவராத்திரியையொட்டி நிறைவுபெறும்.
கங்கை, யமுனை மற்றும் கற்பனை நதியான சரஸ்வதி கலக்கும் என்று நம்பப்படுகிற அலகாபாத்தின் திரிவேணி சங்கமத்தில் இந்த ஆண்டின் மகா கும்பமேளா கோலாகலமாக தொடங்கியுள்ளது.
இத் திருவிழாவில் நிர்வாண சாமியார்கள் நதியில் நீராடுவது முக்கிய அம்சங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
இதேவேளை முன்னைய மகா கும்பமேளாக்களை விட இம்முறை அதிகமானோர் கலந்துகொண்டுள்ளனர். இதன் மூலம் உலகில் அதிகமானோர் குவியும் நிகழ்வாகவும் இது பதிவாகியுள்ளது.



(virakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE