......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Tuesday, 15 January 2013
இந்திய பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் தொடர்கிறது!
பாகிஸ்தானுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் நிலவி வரும் தொடர் பதற்றம் குறித்து எதிர்க்கட்சிகளுடன் இந்திய மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்த உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ஜனவரி 6ஆம் தேதி தொடர்ச்சியாக அத்துமீறல்களில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது.
இந்திய இராணுவ வீரர்களைக் கோரமாக கொலை செய்து அவர்களின் தலையைத் துண்டித்தது பாகிஸ்தான் இராணுவம். அதில் ஹேமராஜ் என்ற இராணுவ வீரரின் துண்டித்த தலையை தூக்கிச் சென்றுள்ளது பாகிஸ்தான்.
மேலும் இந்திய நிலைகள் மீது தொடர்ச்சியாக அந்த நாடு தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு இந்திய இராணுவமும் பதிலடி கொடுத்து வருவதால் எல்லையில் போர் மேகம் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் இது தொடர்பாக எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் ,பாகிஸ்தானை கண்டிக்காமல் இருப்பதாக பாஜக கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்தக் கண்டனத்துக்குப் பின்னர் பாஜக மூத்த தலைவர்கள் அருண் ஜேட்லி மற்றும் சுஷ்மா ஸ்வராஜை நேற்று தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மன்மோகன்சிங், எல்லை பதற்றம் குறித்து எதிர்க்கட்சிகளுடனும் கலந்து ஆலோசிக்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறார்.
இதேபோல் எதிர்க்கட்சிகளைக் கலந்து ஆலோசிக்காமல் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளமாட்டோம் என்றும் உறுதியளித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் இன்று எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இந்தக் கூட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியின் பதற்றமான நிலைமை குறித்து விவரிக்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.