......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 15 January 2013

மட்டக்களப்பு எல்லை நிர்ணயம்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்


-றிதா-
DSC01513மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை மற்றும் கிரான் பிரதேச செயலகப்பிரிவுகளிலுள்ள தமிழ் கிரமாங்கள் ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுடன் இணைப்பதற்கு எடுத்த தீர்மானத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வண்மையாக கண்டிக்கின்றது என நேற்று (14.1.2013) மட்டக்களப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடாத்திய ஊடகவியலாளர் மாநட்டில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று மட்டக்களப்பிலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் கருத்து தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை நிர்ணயம் தொடர்பான கூட்டமொன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை  (13.1.2013) நடைபெற்றுள்ளது.
இந்த எல்லை நிர்ணயம் தொடர்பான கூட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரசியல் வாதிகள் எவரும் அழைக்கப்படவில்லை. அதிகாரிகள் மாத்திரம் இக் கூட்டத்தில் கலந்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் பொது நிருவாக உள்நாட்டலுவல்கள்  அமைச்சின் மேலதிக செயலாளர் டளலகே மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தேர்தல் தொகுதியிலுள்ள கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புனானை மேற்கு, மற்றும் வாகனேரி ஆகிய கிராமங்களை ஓட்டமாவடி பிரதேச செயயலகத்துடனும், வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புனாணை கிழக்கு கிராம சேவகர் பிரிவை கோறளைப்பற்று மத்தி எனப்படும் பிரதேச செயலகத்துடன் இணைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக நாங்கள் அறிகின்றோம்.
இந்த மாவட்டத்திலுள்ள அரசியல்வாதிகளான எங்களை இக் கூட்டத்திற்கு அழைக்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நன்கு திட்டமிடப்பட்டு இங்கு வந்து அதிகாரிகளினால் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு போதும் இந்த முடிவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாது இந்த தீர்மானத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது.
இந்த கிராமங்களை ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலகங்களுடன் இணைப்பதாயின் அந்த கிராம மக்களிடம் முதலில் கேட்க வேண்டும் அடுத்த தாக இதற்கு அரசியல் வாதிகளின் ஒப்புதலும் பெறவேண்டும்.
அவ்வாறில்லாமல் யாருக்கும் தெரியாமல் இந்த கிராமங்கள் இன்னுமொரு பிரதேச செயலகங்களுடன் இணைக்கப்படுவதை அனுமதிக்கமுடியாது.
இந்த கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களாகிய எங்களுக்கு ஏன் அழைப்பில்லை என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கேட்ட போது இது ஆரம்பக் கட்டம் அடுத்த இறுதிக் கூட்டத்திற்கு நீங்கள் அழைக்கப்படுவீர்கள் என கூறினார்.
ஆனால் இது முடிவை அறிவிக்கும் கூட்டமாக இருந்துள்ளது இந்த தீர்மானத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதியமைச்சர்  முரளிதரன் மற்றும் முன்னாள் அமைச்சரும் தற்போதய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோரிகளின் ஒப்புதல்கள் பெறப்பட்டுள்ளதாகவும் நாங்கள் அறிகின்றோம்.
இந்த மாவட்டத்திலுள்ள ஏனைய அரசியல் வாதிகளின் ஒப்புதல்கள் பெறப்படவில்லை. எந்த முடிவாயினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதி நிதிகளான எங்களிடமும் கதைத்திருக்க வேண்டும். எங்களுடன் ஆலோசனை செய்து இணக்கப்பாடுடன் ஒற்றுமையுடன் முடிவுகளை எடுத்திருக்க வேண்டும்.
இன ரீதியான பிரதேச செயலகங்கள் உருவாக்கப்படக் கூடாது என அரசாங்கம் தெரிவித்துள்ள போது ஏன் இவ்வாறான ஒரு முடிவு எடுக்கப்படல் வேண்டும். இந்த மாவட்டத்தில் கோறளைப்பற்று மத்தி எனும் இன ரீதியான பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டதன் பின்னர்தான் இந்த பிரச்சினைகள் இங்கு உருவானது.
எல்லை நிர்ணயம் தொடர்பாக முடிவெடுப்பதாயின் இந்த மாவட்டத்தின் சகல அரசியல் வாதிகளும் இருக்கவேண்டும் அந்த பகுதி மக்களிடம் ஒப்புதல் பெறவேண்டும்.
தற்போது இது தொடர்பாக எடுத்துள்ள முடிவை மீளாய்வு செய்ய வேண்டும் இந்த விடயமாக பொது நிருவாக உள்நாட்டலுவள்கள் அமைச்சருக்கும் மாவட்ட அரசாங்க அதிபருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற பிரதி நிதிகள், மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கையொப்பமிட்டு ஒரு கடிதமொன்றை அனுப்பவுள்ளோம்.
இந்த பகுதியில் தமிழ் முஸ்லிம் உறவு வலுவடைந்து வருவதை குழப்புவதற்காக மத்திய அரசாங்கம்  இவ்வாறான சதி நடவடிக்கைகளை செய்வதற்கு முனைகின்றது என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
கிரான் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள 11300 ஏக்கர் காணியும், வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 1200 ஏக்கர் காணிகளும் இதன் மூலம் கோறளைப்பற்ற மத்தி மற்றும் ஓட்டமாவடி ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு மாற்றப்படுகின்றது. இதை ஒரு போதும் ஏற்றக்கொள்ள முடியாது. ஆரம்பமுதல் இந்த கிராம மக்கள் இந்த அலுவலங்களின் கீலேயே வாழ்ந்து வருகின்றனர்.
எனவேதான் இந்த தீர்மானத்தைவன்மையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்டிப்பதுடன் அந்த முடிவை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனவும்  மேலும் தெரிவித்தார்.
இதில் கருத்து தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.அரிய நேந்திரன் இந்த முடிவுக்கு எதிராக நாங்கள் கையொப்பிமிட்டு பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சருக்கு கடிதமொன்றை அனுப்பவுள்ளோம், அடுத்ததாக ஜனாதிபதிக்கும் இது தொடர்பாக தெரியப்படுத்துவோம். இதற்கு சரிவராவிட்டால் மக்கள் சாத்வீக போராட்டமொன்றில் இறங்குவார்கள் என தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பி.அரியநேந்திரன், மற்றம் கிழக்கு மாகாண சபை உறப்பினர்களான சட்டத்தரணி துரை ராஜசிங்கம், இரா.துரைரட்ணம், நடராசா, கிருஷ்ணப்பிள்ளை (வெள்ளிமைல) மற்றும் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.



(kattankudy)


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE