......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Sunday, 6 January 2013
பிரேசில் சிறைச்சாலையில் பூனை மூலம் கடத்தல்!
பிரேசில் நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான ரியோ டி ஜெனீரோவில் உள்ள அலகோவாஸ் சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற நூதனமான கடத்தல், சிறைக்காவலர்களை திகைப்பில் ஆழத்தியுள்ளது.
ஆங்கில புத்தாண்டு தினமான கடந்த 1ஆம் தேதி, அலகோவாஸ் சிறைச்சாலையின் பிரதான வாயிலில் சிறைக்காவலர்கள் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர்.
அப்போது, உடல் முழுவதும் துணியால் சுற்றப்பட்ட ஒரு பூனை சிறையினுள் நுழைய முற்பட்டது. சந்தேகப்பட்ட காவலர்கள் அந்தப் பூனையை பிடித்து, எப்படி காயம் ஏற்பட்டது? என்று சோதித்தனர்.
அந்த சோதனையில், பூனையின் உடலுடன் கட்டிவைக்கப்பட்டிருந்த துளைபோடும் உபகரணத்திற்கான ஆணிகள், ஒரு கையடக்கத்தொலைபேசி சார்ஜர், இயர் போன், மெமரி கார்ட், பேட்டரிகள் ஆகியவற்றை கண்டுபிடித்த காவலர்கள் உறைந்து போயினர்.
பூனையின் மூலம் இந்த பொருட்கள் யாருக்காக கடத்தப்பட்டது என்பது புரியாமல், அவர்கள் தவித்துக் கொண்டுள்ளனர். மேலும் பூனை வாக்குமூலம் அளிக்கப்போவதில்லை என உணர்ந்து கொண்ட காவலர்கள், சிறையினுள் உள்ள 263 கைதிகளையும் இந்த கடத்தலில் குற்றவாளிகளாக சேர்க்க முடிவு செய்துள்ளனர்.+
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.