ஆளும் கட்சியின் ஆதரவாளர்களும், குண்டர்களும் தலைமை நீதிபதியின் வீட்டுக்கு முன்பாக ஆர்பாட்டம் நடத்தினாலும், அது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க மறுக்கிறது என்று சட்டத்தரணிகள் சங்கத்தைச் சேர்ந்த லால் விஜயநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பிபிசி செய்திச்சேவை வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பிரதம நீதியரசரின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அமைச்சர்கள் கூட பிரதம நீதியரசருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் ஊடகங்கள் மூலம் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது பிரதம நீதியரசரின் பாதுகாப்பை பாதிக்கக் கூடியது. பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தாலும் அது சட்ட ரீதியில் செல்லுபடியாகக்கூடியது அல்ல.
பிரதம நீதியரசர் பதவி விலகாவிட்டால், இராணுவத்தினரைப் பயன்படுத்தி அரசு அவரை விலக்கலாம் என்று தாம் அஞ்சுவதாகவும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.