மாகாணங்களுக்கு விரிவான அதிகாரங்கள் வழங்குவதற்கு அரசியலமைப்பை முழுமையாக மாற்றவேண்டும். என்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகள் தெரிவித்துள்ளன.
ஐக்கிய இடது முன்னணி, இலங்கை சமசமாஜ கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி என்பனவே இவ்வாறு தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் ஜனநாய இடது முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவிக்கையில்,
அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படவிருக்கின்ற புதிய திருத்தத்தில் நிர்வாகத்துறையின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு நாடாளுமன்ற முறைமை பலப்படுத்தப்படவேண்டும்.
சகல இனங்களும் ஆட்சியில் உண்மையாக பங்குப்பற்ற வாய்ப்பு வழங்குவதற்கு அதிகார பகிர்வு அவசியமானது.
அதிகார பகிர்வுக்கான அலகாக மாகாணம் இருக்கவேண்டும்.சில மாவட்ட மட்ட அதிகார பகிர்வுபற்றி பேசுகின்றனர். மாகாணம் பலவீனமான ஆட்சி அலகாகவே இருக்கவேண்டும்.என்றார்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை பாதுகாப்பதற்காக ஆளும் தரப்பிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் 31 பேர் எடுக்கும் முயற்சி பற்றி அவர் தெரிவிக்கையில், இது கருத்தாடலுக்கான ஒரு முயற்சி மட்டுமேயாகும்.
13 ஆவது திருத்தத்திற்கு எதிரான ஒரு இயக்கம் காணப்பட்டது. ஆயினும் நாம் அதனை பாதுகாப்பதற்கு விரும்புகின்றோம். என்றும் அவர் கூறினார்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.