......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 19 January 2013

வெலிக்கடைக்கு மாற்றுமாறு 'ஜீனா மேடம்'கோரிக்கை

-லக்மால் சூரியகொட

விபசாரத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பெண்களை விநியோகித்துவந்த குற்றத்திற்காக களுத்துறை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஜீனா மேடம் தன்னை வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றுமாறு நீதிமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டார்.


தனக்கு உரிய சுகாதார வசதிகள் பெறமுடியாது இருபதனாலேயே தன்னை மாற்றுமாறு கோருவதாகவும் அவர் நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.

சிறுத்தையின் தோல் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டப்பட்டுள்ள மற்றுமொரு வழக்கு விசாரணைக்காக கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு கோரியுள்ளார்.

எனக்கு குளுகோமா எனும் கண்நோயும் நீரிழிவும் உயர் அழுத்தமும் இருக்கின்றது. இவற்றுக்கான வைத்திய வசதிகள் வெலிக்கடை சிறைச்சாலையில் இருக்கும் போது எனக்கு கிடைத்தது. ஆனால் களுத்துறை சிறைச்சாலையில் வைத்து அதற்கான வைத்திய வசதிகள் கிடைப்பதில்லை என்றார்.

சிறைச்சாலையை மாற்றும் அதிகாரம் தனக்கு இல்லை எனக்கூறிய நீதவான் கனிஷ்க்க விஜேரத்ன அவருக்கு தேவையான மருந்து வசதிகளை வழங்குமாறு களுத்துறை சிறை அதிகாரிகளுக்கு பணித்தார்.

வழக்கு தாக்கல் செய்தவர் நீதிமன்றத்தில் நேற்று பிரசன்னமாய் இருக்காமையினால் சிறுத்தை தோல் வழக்கை பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு நீதவான் உத்தரவிட்டார்.
.


(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE