......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 6 January 2013

'பொக்கட்' இல்லாத சீருடை வழங்கயோசனை: ஆணையாளர்

பரீட்சை வினாத்தாள்களை அச்சிடும் அச்சகப்பகுதிகளின் பாதுகாப்பை பன்மடங்காக அதிகரிப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவித்த பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் புஷ்பகுமார அச்சகப்பகுதிகளில் சேவையாற்றுகின்ற ஊழியர்களுக்கு 'பொக்கட்' இல்லாத சீருடையை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


கல்விப்பொதுத்தராதர சாதாரணத்தரப்பரீட்சையின் விஞ்ஞான வினாத்தாள்கள் வெளியானதை அடுத்தே அச்சகப்பகுதிகளின் பாதுகாப்பு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சாதாரணத்தரப் பரீட்சை விஞ்ஞான வினாத்தாள் வெளியாகியதை அடுத்து புதிய தொழிற்நுட்பங்களுடன் கூடிய பாதுகாப்பு கருவிகளையும் பொருத்துவதற்கும் நவீன அச்சடிக்கும் இயந்திரங்களையும் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவிருக்கின்றது என்றார்.


(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE