......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 23 January 2013

மலேஷிய பிரதமர் காசா விஜயம்


பலஸ்தீன மக்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் மலேஷிய பிரதமர் நஜிப் ரஸாக் நேற்று ஹமாஸ் அமைப்பு ஆளும் காசாவுக்கு விஜயம் மேற்கொண்டார். இதன்போது அவர் பதா மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையிலான ஐக்கியத்திற்கு தமது ஆதரவை தெரிவித்தார்.

காசாவுக்கான எகிப்து எல்லையான ரபா வாயிலூடாக நஜிப் தனது வெளியுறவு அமைச்சர் அனிபா மற்றும் ஏனைய பிரமுகர்களுடன் காசாவை வந்தடைந்தார். அங்கு அவர் ஹமாஸ் பிரதமர் இஸ்மைல் ஹனியானை சந்தித்தார். இதன்போது இருவரும் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீன மக்களுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தும் வகையிலேயே தாம் காசா வந்ததாக கூறினார். “நாம் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்து வந்திருக்கிறோம். ஆனால் நாம் ஒரே உம்மாஹ் (முஸ்லிம் சமூகம்). எமக்கு பலஸ்தீன மக்களின் சிக்கல்களை உணர முடியும்” என்று நஜிப் குறிப்பிட்டார்.
இதில் பலஸ்தீனின் ஆளும் ஹமாஸ் மற்றும் பதாவுக்கு இடையிலான சமரச பேச்சுவார்த்தைக்கும் அவர் தனது ஆதரவை வெளியிட்டார்.
இந்த ஊடக மாநாட்டில் உரையாற்றிய இஸ்மைல் ஹனியான் இஸ்ரேலில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தல் குறித்தும் கருத்து வெளியிட்டார். அதில் இஸ்ரேலில் கடும் போக்கு அரசில் இருந்து தேர்தல் மூலம் மேலும் கடும்போக்கு அரசு உருவாகவுள்ளதாக எச்சரித்தார்.
இந்த ஊடக மாநாட்டைத் தொடர்ந்து மலேஷிய பிரதமர் காசா நகரின் ஷிபா மருத்துவமனை மற்றும் பாராளுமன்ற கட்டடத்திற்கு விஜயம் மேற்கொண்டார். இதன்போது அவர் காசாவுக்கு மருத்துவ உதவிகளையும் வழங்கினார்.
முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட மலேஷியா பலஸ்தீனத்துடன் நெருங்கிய உறவை பேணி வருவதோடு, இஸ்ரேலுடன் எந்த ராஜதந்திர உறவையும் முன்னெடுப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒக்டோபரில் கட்டார் நாட்டு தலைவர் ஷெய்க் ஹமித் பின் அல் தானியின் காசா விஜயத்திற்கு பின்னர் வெளிநாட்டு தலைவர் ஒருவர் அங்கு விஜயம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். அத்துடன் 2007 ஆம் ஆண்டில் ஹமாஸ் காசாவில் ஆட்சிக்கு வந்த பின்னர் அங்கு விஜயம் மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டு தலைவர் நஜிப் என்பது குறிப்பிடத்தக்கது.
எகிப்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் காசாவுக்கான ரபா எல்லை திறக்கப்பட்டதைத் தொடர்ந்தே அங்கு வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கு செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி 9 ஆம் திகதி துனீஷிய ஜனாதிபதி மன்காப் மர்சூக்கி காசா செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE