......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 23 January 2013

செவ்வாயின் உட்பரப்பில் நுண்ணுயிர்கள் சாத்தியம்


செவ்வாய் கிரகத்தின் உட்புறத்தில் நுண்ணுயிர்கள் இருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக புதிய ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனிலுள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் அபர்டீன் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்விலேயே இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் செவ்வாயின் மேற்பரப்பில் உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியமில்லை. ஏனென்றால் அங்கு கதிரியக்கங்களின் தாக்கம் அதிகமாகவும் மற்றும் உறைந்தும் காணப்படுகிறது. ஆனால் பூமியின் உட்பரப்பில் எவ்வாறு நுண்ணுயிர்கள் வாழ்ந்து வருகின்றனவோ அது போன்று ஹைட்ரஜனை சுவாசித்து வாழக்கூடிய பாக்டீரியாக்கள் இருக்க வாய்ப்பு உள்ளது.
எனினும் விலங்குகள் ஏதும் வாழ்ந்ததற்கான சான்றுகள் ஏதும் துரதிர்ஷ்டவசமாக கிடைக்கவில்லை. எனவே செவ்வாய் கிரகத்திற்கு ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்வதென்றால் இனி அதன் உட்பரப்பில் ஆய்வு செய்வதற்கான வழிகளை கண்டறிவதே அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.




(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE