......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 22 January 2013

ஐ.தே.க. பிரதி தலைவர் பதவியில் சர்ச்சை

ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவராக ஜோசப் மைக்கல் பெரேராவும் தேசிய அமைப்பாளராக தயா கமகேயும் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் கட்சியின் பிரதி தலைவர் தெரிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை மாலை கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்றது. இதன்போதே இப்பதவிகளுக்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

  இதேவேளை திஸ்ஸ அத்தநாயக்க பொதுச் செயலாளராகவும் செனரத் கப்புகொட்டுவ பொருளாலராகவும் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எனினும் பிரதி தலைவர் பதவிக்கு எவரும் இன்றைய செயற்குழுக் கூட்டத்தில் தெரிவு செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.



(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE