......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Friday, 11 January 2013

பள்ளிவாசல்கள் உடைப்பு, ஹலால் விவகாரம்: கல்முனை மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம்

- அப்துல் அஸீஸ் 

இலங்கையில் இடம்பெற்றுவருகின்ற பள்ளிவாசல்கள் உடைப்புத் தொடர்பாகவும் ஹலால் இலட்சனை பயன்பாடு தொடர்பாகவும் ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றினை  கையளிப்பதற்கான பிரேரணை ஒன்று கல்முனை மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டது.  


மாநகர சபையின் 2013 ஆம் ஆண்டுக்கான முதலாவது அமர்வு மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில நேற்று நடைபெற்றது. இதன்போதே பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

இலங்கையில் இடம்பெற்றுவருகின்ற பள்ளிவாசல்கள் உடைப்புத் தொடரில் அனுராதபுரத்தில் மல்வத்து ஓயா எனும் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசலை இனவாத கும்பலொன்று நள்ளிரவு வேளையில் தாக்கியுள்ளார்கள். அதுமட்டுமல்லாது, சில பௌத்த பிக்குகள் 'ஹலால்' என்ற வாசகத்தை உபயோகப்படுத்தக் கூடாது என துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டு பாதயாத்திரைகளை நடத்திவருகின்றனர். 

ஆனால் இஸ்லாமியர்கள் ஹலாலான உணவுகளை உட்கொள்ளவேண்டும் என்பது இஸ்லாமிய அடிப்படை கொள்கையோடு தொடர்புபட்ட விடயம். தத்தம் மதத்தை பின்பற்றுகின்ற மத சுதந்திரமுள்ள  இந்த ஜனநாயக இலங்கை நாட்டில் இஸ்லாத்திற்கும் இஸ்லாமியர்களிற்கும் எதிராக குறிப்பிட்ட சிலரால்  மேற்கொள்ளப்படுகின்ற மேற்படி நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு ஜனாதிபதியின்  உதவியினை கோரியே இந்த பிரேரணை சபையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த பிரேரணை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட வேண்டும் எனவும் சபையில் முன்வைக்கப்பட்டு பிரேரணை  உறுப்பினர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொல்லப்படது.



(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE