......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 14 January 2013

ரிசானா விவகாரம்: உலக நாடுகளின் சாடலுக்கு சவூதி அரசு கண்டனம், சட்டமே அமுல் செய்யப்பட்டுள்ளது என தெரிவிப்பு

சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கை பணிப்பெண்ணான ரிசானா நபீக் தொடர்பில் உலக நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் தம்மை சாடுவதை சவூதி அரேபியா கண்டித்துள்ளதுடன் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களையும் மறுத்துள்ளது.


இது குறித்து சவூதி அரசின் பேச்சாளர் தெரிவித்துள்ளதாவது,
குறித்த பணிப்பெண் 21 வயதானவர் என்றே அவரது கடவுச்சீட்டில் உள்ளது. குற்றச் செயலுடன் அவர் சம்பந்தப்பட்டுள்ளார். இந் நிலையில் சவூதி அதன் சட்டத்தையே அமுல் செய்துள்ளது. 18 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கு ஒரு போதும் சவூதி மரண தண்டனையை அமுல் செய்வதில்லை. கொல்லப்பட்ட குழந்தையின் பெற்றோரை மன்னிப்பளிக்கச் செய்ய கடுமையாக முயற்சிக்கப்பட்டது. அதற்கான இரத்தப்பணமும் வழங்க சவூதி தயாராகவே இருந்தது. எனினும் குறித்த பெற்றோர் மன்னிப்பளிக்கவில்லை.

சவூதி அரேபியா அனைத்து சட்டதிட்டங்களையும் மதிக்கிறது. தனது நாட்டு மக்கின் உரிமைகளுக்கும் உடமைகளுக்கும் கௌரவமளிக்கிறது. இந்நிலையில் சவூதியின் நீதித் துறையிலும் அதன் தீர்ப்புகளிலும் எந்தவிதமான தலையீடுகளையும் அனுமதிக்க முடியாது.



(virakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE