......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 27 January 2013

ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக அதிகரிப்பு!


பாடசாலை ஆசிரியர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு பாலியல் குற்றச்சாட்டுக்களில்  ஈடுபடும் ஆசிரியர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்படுவார்கள் என பிரதி கல்வியமைச்சர் விஜத விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

சிறுவர் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் மகளிர் விவகார அமைச்சு மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஆகியவையுடன் இணைந்து கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆசியர் ஒருவர் மீது பாலியல் குற்றம் தொடர்பான முறைப்பாடு மேற்கொள்ளப்படுமானால்  அக் குற்றச்சாட்டு உண்மையானதா அல்லது பொய்யானதா என ஆராயும் முன்னர் அவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்படுவார் எனவும் பின்னரே அது தொடர்பில் விசாரணைகள் இடம்பெறும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.



(virakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE