“திவிநெகும” நுண் நிதி வங்கி வலையமைப்பை விரைவில் நாடு முழுவதும் ஆரம்பிப்பதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
வறுமையில் பீடிக்கப் பட்டுள்ள மக்களை மேம்படுத்த அவசியமான நிதியும், மூலதனத் தேவை யும் இந்த வங்கி வலை யமைப்பின் ஊடாக பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
களனி, வெதமுல்லையில் பிரதேச அபிவிருத்தி வங்கியின் புதிய தலைமை யகக் கட்டடத்தைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற் கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அதிகாரத் துக்கு வர முன்னர் சமுர்த்தி நிதியத் தின் 80 வீதம் செல்வம் பொருந்திய உயர்மட்ட நிறுவனங்களிலேயே முத லீடு செய்யப்பட்டிருந்தன.
தூரப் பிரதேச பின்தங்கிய கிராமங்க ளில் அப்பாவி ஏழை மக்கள் மிகக் கஷ்டத்துடன் சேமிக்கும் நிதி இறுதி யில் உயர் நிறுவனங்களிலேயே முதலீடு செய்யப்பட்டன.
ஜனாதிபதி இந்த நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தினார்.தற்போது வறிய மக்களின் நிதி அவர்களின் நிதி, மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தப்படுகிறது. அங்கிருந்து மேம்பாடு அடைவோரை நாம் பிரதேச அபிவிருத்தி வங்கிக்கு ஒப்படைக்கிறோம்.
அவர்கள் இந்த வங்கிகள் ஊடாக மேலும் மேம்பாடு அடையலாம் என்றும் அமைச்சர் கூறினார். பிரதேச அபிவிருத்தி வங்கித் தலைவி கேஷலா ஜயவர்த்தனா, பொது முகாமையாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரத்னசிறி சிர்வர்த்தனா ஆகியோரும் உரையாற்றினர். மதத் தலைவர்கள் நல்லாசி வழங்கினர்.
(எப். எம்.)
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.