......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 6 January 2013

பெண்ணை கடத்தி 3 நாட்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது

பெண் ஒருவரை கடத்திச் சென்று மூன்று நாட்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்ட சம்பவம் பண்டாரவளையில் இடம்பெற்றுள்து.


சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

பண்டாரவளை மாநாகரசபையில் பணிபுரியும் 22 வயதுடைய பெண்ணொருவர் வேலை முடிந்து சக ஊழியர்களுடன் அதே மாநகரசபையில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் ஒருவரின் முச்சக்கர வண்டியில் சென்றுள்ளார். இதன்போது ஏனைய ஊழியர்கள் தமது இடங்களில் இறங்கியதும் குறித்தப் பெண்ணும் இறங்க முற்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த சந்தேக வீட்டின் அருகிலேயே கொண்டு இறக்கி விடுவதாக கூறி வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று மூன்று நாட்களாக பாலியல் துஷ'பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை குறித்தப் பெண்ணை சந்தேகநபர் வீட்டிற்கு அருகில் விட்டுச் சென்றுள்ளார். சம்பவம் தொடர்பில் குறித்தப் பெண் பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளார்

சம்பவம் தொடர்பில் பெற்றோர் பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டதை தொடர்ந்து சந்தேக நபரான மாநகரசபை அலுவலக உதவியாளர் பண்டாரவளை பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் குறித்தப் பெண்ணுக்கு அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



(virakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE