......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 23 January 2013

சுங்க தலைமையகத்திற்கு 30 கமெராக்களை பொருத்த ஏற்பாடு

-சுபுன் டயஸ்

வினைத்திறனை அதிகரிக்கவும் உள்ளே நடப்பவற்றை கண்காணிக்கவும் சுங்க தலைமை அலுவலகத்தின்  உள்ளே 30 கண்காணிப்பு கமெராக்களை பொருத்துவதற்கு சுங்கத்திணைக்களம் தீர்மானித்துள்ளது.


திணைக்களத்திற்குள் பொருத்தப்பட்டுள்ள கமெராக்கள் பழுதடைந்து விட்டதனால் புதிய கமெராக்களை அடுத்த சில வாரத்திற்குள் பொருத்தப்படும்.

இலஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்டதாக கூறப்படும் சுங்கப்பணிப்பாளர் கைது செய்யப்பட்டபோது அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெரா செயலிழந்து விட்டதாக சுங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவரை கைது செய்வதற்கு 10 நாட்களுக்கு முன்னர் கமெரா பழுதடைந்துவிட்டது. கண்காணிப்பு கமெரா செயற்பாட்டில் இருந்திருந்தால் எமது சுங்க அதிகாரியை காப்பாற்றியிருக்க கூடியதாய் இருந்திருக்கும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.



(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE