......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 1 January 2013

ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி


ஈராக்கில் நேற்று இடம் பெற்ற தொடர் குண்டு தாக்குதல்களில் 40 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 46 பேர் காயமடைந்துள்ளனர். ஈராக் தலைநகர் பக்தாதின் தென் பகுதியான முஸ்ஸயா ப்பில் இடம் பெற்ற குண்டு வெடிப்பில் ஒரே குடும்பத்தில் 7 பேர் கொல்லப் பட்டனர். இதன் போது மேற்படி குடும்பத்தினரின் வீட்டுக்கு அருகில் குண்டு வெடிப்பு இடம் பெற்றுள்ளது.

இதில் தேசிய மீள்கட்டுமான ஆலோசகர் காலித் லுஹைபியின் வீட்டின் மீது இனந்தெரியாதோர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்டதோடு மேலும் இருவர் காயமடைந்தனர்.
மறுபுறத்தில் கிழக்கு புருனா நகரில் பொலிஸ் வாகனம் மற்றும் பழங்குடியினத் தலைவரை இலக்கு வைத்து அடுத்தடுத்து நடத்தப்பட்ட வீதியோர குண்டு தாக்குதலில் ஒரு பொலிஸார் கொல்லப்பட்டதோடு நான்கு பேர் காயமடைந்தனர். இது தவிர மாபல மாகாண கவுன்ஸிலின் வாகனத் தொடரணி ஒன்றை இலக்கு வைத்து கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த குண்டு வெடிப்பில் மேலும் ஒருவர் பலியானார்.




(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE