......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 5 December 2012

நீதியரசருக்கு எதிராக கூச்சலிட கஞ்சாவுக்கு அடிமையானவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்: தயாசிறி


பிரதம நீதியரசருக்கு எதிராக கூச்சலிடவும் கோசங்களை எழுப்பவும் போதைப்பொருள் கஞ்சாவுக்கு அடிமையானவர்களே அழைத்து வரப்பட்டனர் என இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்த தயாசிறி ஜயசேகர எம்.பி. இவ்வாறு வருகைத்தந்தவர்களுக்கு ரூபா 500 ரூபா வீதம் வழங்கப்படுவதை பாருங்கள் என கூறி சபையில் ஒரு புகைப்படத்தையும் காட்டினார்.


பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 22 அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தின் போதே ஐ.தே.க. எம்.பி. தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்தார். சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தேசிய உரிமை இன்று பாரிய பிரச்சினையாக தலை தூக்கியுள்ளது. இது தொடர்பான அமைச்சர் பொது பல சேன என்ற அமைப்பிற்கு அடிப்பணிந்துள்ளார்.

பௌத்த தேரர்கள் இன்று வீதியில் இறங்கி அமைச்சர்களை அடிப்பணியச் செய்து தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் நிலைமை உருவாகியுள்ளது. பௌத்த தர்மத்திற்கு எதிராக சில தேரர்கள் பொதுபல சேன அமைப்பை அமைத்து பலாத்கார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். பௌத்த தர்மத்தில் இவ்வாறான செயற்பாடுகள் அனுமதிக்கப்படுவது இல்லை என்றார்.


(veerakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE