......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 22 December 2012

பாரத லக்ஷ்மன் கொலைச் சந்தேகநபர்கள் ஐவருக்கு பிணை

பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு சுமார் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அனுபவித்து வந்த சந்தேகநபர்களில் ஐவருக்கு மேல் நீதிமன்றம் இன்று பிணையில் செல்ல அனுமதி வழங்கியது. 


தலா 25 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும் செல்ல நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது. 

மஞ்சுள பிரசாத் ஹெட்டியாரச்சி, கே.ஏ.லங்கா ரசாஞ்ஜன, நாலக்க சஞ்ஜீவ, தரிந்து அசங்க மற்றும் பாரத லக்ஷ்மனின் பாதுகாப்பு உத்தியோகஸ்தரான ஆர்.காமினி ஆகியோருக்கே இவ்வாறு பிணையில் செல்ல அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. 

ஜனாதிபதி தொழிற்சங்கத்தின் ஆலோசகரான பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரன் உட்பட நான்கு பேர், கடந்த மாகாணசபைத் தேர்தலின் போது கொலன்னாவை பிரதேசத்தில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.  


(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE