அதில் கூறப்பட்டுள்ளதாவது, சமத்துவம், மற்றும் நிரந்தர சமாதானத்தின் செய்தியினை உலகிற்கு அளித்த இயேசுநாதரின் ஆச்ச ரியமிக்க பிறப்பினை நினைவு கூரும் புனித நத்தார் பண்டிகையின் நிமித்தம் பக்தி கமழும் மனதுடன் இந்த ஆசிச் செய்தியை வெளியிடுகின்றேன்.
பாவச் செயல்கள், தன்னலம் என்பவற்றின் காரணமாக நிர்க்கதிக்குள்ளாகி அழிவின் விளிம்பில் மனிதன் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு யுகத்தில் மனித வடிவில் இவ்வுலகில் அவதரித்த இயேசு நாதர் அநீதிக்கு எதி ரான செய்தியினை மக்களுக்கு எடுத்துரைத் தார். கொடுங்கோல் ஆட்சியினால் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்த மக்களுக்கு ஒரு உன்னத தலைவராக இருந்து இயேசு வழிகாட்டினார். கடவுளின் மகனாக இருந்தும்கூட அந்த ஆன்மீகத் தன்மையை கைவிட்டு எம்மீது அளவில்லா கருணை, அன்பு, காட்டியமைக்கு மனித வர்க்கமீது அவர் கொண்டுள்ள நேசம் தான் காரணம்.
நத்தார் எனும் யேசுநாதரின் பிறப்பினை நினைவு கூரும் இத் தினத்தை நாம் களியாட்டமாக கருதக் கூடாது. அருட் தந்தை லூக்கஸ் அவர்களின் சுவிஷேசத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு யேசுநாதரின் பிறப்பானது உள்ளத்தை உருக வைக்கும் ஒரு நிகழ்வாகும். பெத்லஹேம் நகர உணவகங்களிலும், களியாட்ட விடுதிகளிலும் வசதி படைத்தோர் உண்டுகுடித்து ஆடிப் பாடி குதுகலித்துக் கொண்டிருந்த வேளை யிலே யேசுபிரான் ஒரு ஏழைக் குழந்தையாக பாழடைந்த மாட்டுக் கொட்டிலில் பிறந்தார். பாவத்தில் மூழ்கியிருந்தோரை அதிலிருந்து மீட்டெடுப்பதற்கு யேசு அவதரித்துள்ளார் என்ற இனிய செய்தியை வானவர்கள் அறிவித்தனர்.
அநீதிக்கு எதிரான சமாதானத்தின் செய்தியை தலைநிமிர்ந்து நிற்பதற்கு அவர் ஆசீர்வதித்தார். எனவே நத்தார் பண்டிகையை ஒரு களியாட்டமாக கொள்ளாது அதன் யதார்த்தத்தை உணர்ந்து செயற்பட வேண்டும்.
இந்த நாட்டை முப்பது வருட காலமாக ஆட்டிக் கொண்டிருந்த கொடூர யுத்தம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிநடத்தலில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் நாட்டில் நிலையான சமாதானம் உதயமாகியுள்ளது. கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒலிக்கும் மணி யோசையும் பீடத்திற்கருகில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கும் அருட்தந்தையின் பிரார்த்தனையும் இந் நாட்டில் நிலவும் நிரந்தர சமாதானத்தையே எடுத்தியம்புகின்றது. இந்த நத்தார் பண்டிகை உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமானதாக அமைய பிரார்த்திக் கின்றேன்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.