அமெரிக்காவில் தீயணைக்க வந்த வீரர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே நேற்று முன்தினம் நியூயோர்க்கின் வெப்ஸ்டர் பகுதியில் உள்ள இன்ஜின் நிறுவனம் ஒன்றும், அங்குள்ள வாகனங்களும் தீப்பற்றி எரிவதாகத் தகவல் வந்தது. இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க தொடங்கினர்.
தீயை கட்டுப்படுத்திக் கொண்டிருந்த தீயணைப்பு வீரர்களை நோக்கி சிலர் திடீரென சுட்டனர். இதில் இரண்டு தீயணைப்பு வீரர்கள் கொல்லப்பட்டனர். சில வீரர்கள் காயமடைந்தனர்.
விசாரணையில், துப்பாக்கியால் சுட்ட நபர்கள் தான் அப்பகுதியில் தீ விபத்தை ஏற்படுத்தி உள்ளது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.