......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 6 December 2012

சகல பிள்ளைகளுக்கும் சம உரிமை வழங்கும் முறை அறிமுகம்


அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன்
கே. அசோக்குமார், ஸாதிக் ஷிஹான்
குடும்பத்தில் மூத்த பிள்ளைக ளுக்கு மாத்திரம் காணி உரிமை வழ ங்கும் முறையை ரத்துச் செய்து விட்டு சகல பிள் ளைகளுக்கும் சம உரிமை வழங்கும் முறையை அறிமுகப்படுத்தவுள்ளதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமை ச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட அமைச்சுக ளுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துறைகளின் படி காணி தொடர்பான பல்வேறு வேலைத்திட்டங்களை எமது அமைச்சு முன்னெடுத்து வருகின்றது.
இந்நிலையின் நில அளவையாளர் திணைக்களத்தின் செயற்பாடுகளை மேலும் துரிதப்படுத்தும் வகையில் மேலும் 100 நில அளவையாளர்களை ஆட்சேர்க்க தீர்மானித்துள்ளோம்.
அதேபோன்று வடக்கு, கிழக்கு பிரதேசத்திலுள்ள காணி உரிமைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்காக 4 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளோம். வடக்கு, கிழக்கு பிரதேச காணி உரிமையாளர்களுக்கு பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ளவர்களுக்கும் வழங்கப்படும்.
அரச - தனியார் காணிகள் பல மோசடியான முறையில் கைமாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 1140 ஏக்கர் காணிகள் மீண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன. மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு பல இலட்ச காணிகள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்வரும் காலத்தில் மேலும் 50 ஆயிரம் காணிகள் வழங்க எமது அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE