......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 27 December 2012

ஹமாஸ் தலைமை போட்டியிலிருந்து காசா பிரதமர் ஹனியான் விலகல்


ஒருவர் மாத்திரமே போட்டியில்
பலஸ்தீனின் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவின் தலைமைப் பதவிக்கான வாக்கெடுப்பு அடுத்த வாரம் நடைபெறவுள்ளதாக செய்தி வெளியாகி யுள்ளது. காசா மீதான இஸ்ரேலின் வான் தாக்குதல் காரணமாக ஒத்திவை க்கப்பட்ட வாக்கெடுப்பே அடுத்த வாரம் இடம்பெறவுள்ளது.

இதில் அரசியல் தலைமைக்கான போட்டியில் ஒருவர் மாத்திரமே இருப்பதாக தெரிய வருகிறது. தற்போதைய ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் காலித் மிஷால் போட்டியிடப் போவதில்லை என ஒரு மாதத்திற்கும் மேலாக கூறி வருகிறார். அத்துடன் போட்டியில் இருந்து காசாவின் பிரதமர் இஸ்மையில் ஹனியானும் விலகிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஹமாஸ் அரசியல் பிரிவின் துணைத் தலைவர் மூஸா அபூ மர்சூர் மாத்திரமே தலைமைப் பதவிக்கான போட்டியில் இருப்பதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும் தற்போதைய தலைவர் காலித் மிஷால் மீண்டும் ஒரு தவணைக்கு போட்டியிடுவாரா என்பது குறித்து தெளிவில்லாமல் உள்ளது.
மிஷாலுக்கு துருக்கி, கட்டார் போன்ற நாடுகளின் முழு ஆதரவு இருப்பதால் கடைசி தறுவாயில் அவர் களத்தில் குதிக்க வாய்ப்பு உள்ளது. கடந்த 1997ம் ஆண்டு முதல் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவராக இருக்கும் காலித் மிஷால், இஸ்ரேல் உளவுப் பிரிவான மொசாட்டின் பல கொலை முயற்சிகளில் இருந்தும் உயிர் தப்பியுள்ளார்.
1997 ம் ஆண்டு மிஷால் மீது மொசாட் நஞ்சூட்டிய நிலையில் ஜோர்தானில் கைதான மொசாட்டின் இரு உளவாளிகளை விடுவிக்க அந்த நஞ்சுக்கு எதிரான மாற்று மருந்தை இஸ்ரேல் வழங்கியதால் அவர் உயிர் தப்பியமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தலைமைப் பதவிக்கு போட்டியிடாமல் இருக்க தீர்மானித்திருக்கும் மிஷாலுக்கு பல தரப்புகளில் இருந்தும் அழுத்தம் வர வாய்ப்பு உள்ளது. அவர் கடைசி தறுவாயில் தலைமைப் பதவிக்காக போட்டியிட்டாலும் வெற்றிபெறுவது உறுதியாகும் என நம்பப்படுகிறது.



(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE