By J.Stephan
ஆபிரஹாம் லிங்கன், அதிகாரத்தை பரவலாக்கி அமெரிக்காவை ஒன்றுபடுத்தினார். ஆனால் இலங்கையிலுள்ள சில முட்டாள்கள் அதிகாரங்களை ஓரிடத்தில் கையளித்து நாட்டில் இனரீதியான இராச்சியங்களை உருவாக்கும் திட்டங்களை முன்னெடுக்கின்றனர் என ஐ.தே.க. எம்.பி. காமினி ஜயவிக்கிரம பெரேரா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 22 அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
'பாராளுமன்றம் இன்று சேறுபூசும் இடமாக மாறியுள்ளது. அதன் இறையாண்மைக்கு கொச்சைப்படுத்தும் நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சிறப்புரிமை என்ற போர்வையை போர்த்திக்கொண்டு தாம் எதிர்ப்பவர்களை கீழ்த்தரமாக விமர்சிப்பதற்கு பாராளுமன்றத்தை இடமாக பயன்படுத்துகின்றனர்.
மக்களுக்கு அநீதி ஏற்பட்டால் நியாயம் கேட்பதற்கு ஒரே இடம் நீதிமன்றம். அதனை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலை உருவானால் நாடு அராஜக நிலைக்குத் தள்ளப்படும் என்றார்.
(veerakesari)

No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.