......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 15 December 2012

'கணக்காய்வு அறிக்கைகளை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகளை நீக்க முடியும்'

(நபீலா ஹுசைன்)

2011ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கைகளை சமர்ப்பிக்காத கட்சிகளை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலிலிருந்து நீக்கிவிட முடியும் என தேர்தல்கள் திணைக்களம் நேற்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது.


பதிவு செய்யப்பட்ட கட்சிகளில் 20 கட்சிகள் வரையில் 2011ஆம் ஆண்டுக்கான தமது கணக்காய்வு அறிக்கைகளை அனுப்பவில்லை என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

2009ஆம் மற்றும் 2010ஆம் ஆண்டுக்கான அறிக்கைகளை சமர்ப்பிக்காத கட்சிகள் பல இருக்கின்றன. நாடாளுமன்றத்தில் பல பிரதிநிதிகளை கொண்ட கட்சிகள் தமது கணக்காய்வு அறிக்கையை முறையாக சமர்ப்பிக்கவில்லை. 

உரிய காரணங்கள் கூறப்படுமிடத்து கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலத்தை நீடிக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். .

(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE