......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 1 December 2012

யாழ்.பல்கலை மாணவர்கள் விசாரணைக்கு அழைப்பு

யாழ்.பல்கலைகழகத்தைச் சேர்ந்த மாணவர்களை பொலிஸார் இன்று விசாரணைக்கு அழைத்துள்ளனர். அவர்களில் இருவர் விசாரணைக்கு பின்னர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எட்டு பேரிடம் தொடர்ந்தும் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.


யாழ்.பல்கலைகழக மாணவர் சங்கத்தலைவர், செயலாளர் உட்பட 10 பேரை பொலிஸ் நிலையத்திற்கு  இன்று சனிக்கிழமை வருமாறு கோப்பாய் பொலிஸார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஊடாக அறிவித்துள்ளர்.

திருநெல்வேலியில் அமைந்துள்ள ஸ்ரீடெலோ காரியாலயத்தின் மீது  மேற்கொள்ளப்பட்ட  பெற்றோல் குண்டுத் தாக்குதல்  தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகவே மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஸ்ரீடெலோ காரியாலயத்தின் மீது  பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை கோப்பாய் பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 
(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE