சிகரெட் பக்கெட்டுகளில் புகைத்தலின் ஆபத்தை உணர்த்தும் படங்களுடன் கூடிய எச்சரிக் கையை வெளியிடும் சுகாதார அமைச்சின் நடவடிக்கைக்கு அரச மருத்துவ சங்கம் ஆதரவு அளித்துள்ளது.
நாள்தோறும் புதிதாக புகைபிடிப்போர் உருவாகி வருகின்றனர். தினசரி புகையிலை தொடர்பான நோய்களால் மக்கள் பலி யானதாகவும் சங்கம் தெரித்துள்ளது.
இலங்கையில் வருடாந்தம் புகையிலை காரணமாக 12,000 முதல் 20,000 பேர் வரை மரணிக்கின்றனர்.
புகையிலை தொடர்பான நோய்கள் காரணமாகவும் அநேகம் பேர் ஆஸ்பத்திரி களில் அனுமதிக்கப்படுகின்றனர்.
இவை தடுக்கப்படக் கூடியதாகும். புகையிலை பாவனையைக் குறைக்க பல நாடுகள் பலதரப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
புகை சார்ந்த நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ள புகை உற்பத்திகளில் புகைத்தலின் ஆபத்தை விளக்கி படங்களுடன் கூடிய எச்சரிக்கை முறை முக்கிய நடவ டிக்கையாகும்.
புகைத்தல் சார்ந்த விளம்பரங்களை நிறுத்துதல், இதனை ஊக்குவிக்காமை, புகையிலை வரிகளை அதிகரித்தல், பொது இடங்களில் புகைத்தலை தடுத்தல் போன்றவை ஏனைய நடவடிக்கைகளாகும்.
இவ்வாறு சங்க அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.