......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 3 December 2012

பலஸ்தீனின் வரி பரிமாற்றத்தை நிறுத்தியது இஸ்ரேல்


ஐ.நா. வின் தனிநாடு அந்தஸ்த்து பெற்றதற்கு பதிலளிக்கும் வகையில் இஸ்ரேல், பலஸ்தீனத்திற்கு இந்த மாதம் வழங்க வேண்டிய வரி மற்றும் கட்டண நிதியை வழங்காமல் இருக்க இஸ்ரேல் நிதி அமைச்சர் யுவல் ஸ்டைனிட்ஸ் தீர்மானித்துள்ளார். 

பலஸ்தீனர்களிடம் இருந்து பெறப்பட்ட வரி மற்றும் கட்டணத்தையே பலஸ்தீன நிர்வாகத்திற்கு வழங்குவதை இஸ்ரேல் நிறுத்தியுள்ளது.
‘ஐ. நாவில் பலஸ்தீன அந்தஸ்த்துக்கு இஸ்ரேல் எந்த விளைவை ஏற்படுத்தும் என்பதை ஆரம்பத்தில் இருந்து நாம் கூறி வந்தோம்’ என்று இஸ்ரேல் அமைச்சரவை கூட்டத்தில் அந்நாட்டு நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.
‘இந்த மாதத்திற்கான பலஸ்தீன நிர்வாகத்திற்கான வரி நிதியை வழங்கும் எண்ணம் இல்லை. இதன் மூலமே பலஸ்தீன நிர்வாகம் இஸ்ரேலிய மின் விநியோக நிறுவனங்களுக்கான கடனை செலுத்த வேண்டி உள்ளது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதன் மூலம் பலஸ்தீன நிர்வாகத்திற்கு வழங்க வேண்டிய 120 மில்லியன் டொலரை இஸ்ரேல் முடக்கவுள்ளதாக இஸ்ரேலின் ஹாரட்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE