......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 22 December 2012

வெள்ளம், மண்சரிவு: புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு புதிய பாடப்புத்தகங்கள்


வெள்ளம், மண்சரிவு காரண மாகப் பாதிக்கப்பட்டுள்ள பிரதே சங்களில் வாழும் மாணவர்களின் பாடப் புத்தகங்கள் சேதம டைந்திருக்குமாயின் அம்மாண வர்களுக்குப் புதிய பாடப் புத்தகங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் மாகாண கல்வி வலயங்கள் மற்றும் பாட சாலை அதிபர்கள் ஊடாக இது தொட ர்பான விபரங்கள் தற்போது திரட்டப்படுவதாக கல்வி வெளி யீட்டுத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் திஸ்ஸ ஹேவா வித்தாரன கூறினார்.
இவ்வெள்ளம், மண்சரிவு காரண மாக சேதமடைந்துள்ள பாடப் புத் தகங்களின் முழுமையான விபரத்தை இந்நடவடிக்கை மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என நாம் நம்புகின்றோம் என்றும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களிலிருந்து கிடைக்கப்பெறும் விபரங்களுக்கு ஏற்ப பாடப் புத்தகங்களை விநியோகிக்கவென தனியான பிரிவொன்றை நேற்று கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் ஆரம்பித்ததாகவும் இதற்குப் பொறுப்பாக விநியோகப் பிரிவின் உதவி ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE