......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 4 December 2012

காத்தான்குடி நகர சபையினால் குப்பைகள் கொட்டுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்


DSC09680
மளப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள றிஸ்வி நகர் கிராம மக்கள் காத்தான்குடி றிஸ்வி நகர் கடற்கரை பகுதியில் காத்தான்குடி நகர சபையினால் குப்பைகள் கொட்டுவதற்கு எதிராக இன்று(3.12.2012) காலை ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

குப்பை கொட்டும் பகுதியில் ஒன்று திரண்ட இந்த பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காத்தான்குடி நகர சபை இந்த பகுதியில் குப்பைகளை கொட்டுவதால் இந்த பகுதி துர்நாற்றம் வீசுவதாகவும் அத்தோடு கடற்கரை மற்றும் றிஸ்வி நகர் கிரமாத்தின் சுகாதாரம் சீர்கெடுவதாகவும் சூழல் மாசடைவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
காலையில் நகர சபையின் வாகனங்கள் குப்பைகளை இந்த இடத்தில் கொட்டுவதற்காக வந்த போது அதை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் சுலோகங்களை தாங்கி ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் குப்பை கொட்ட கோடிகளை வசூலித்து நீங்கள் செய்தது என்ன? நகர முதல்வரே சூழலை அழகு படுத்த பாடுபடும் நீங்கள் எங்களின் குழந்தைகளின் சுகத்தை காப்பாற்றுங்கள், நகர சபையே இங்கு குப்பைகளை கொட்டுவதை உடன் நிறுத்த வேண்டும் என்பன போன்ற சுலோகங்களை தாங்கி நின்றனர்.
ஆர்ப்பாட்டம் நடை பெற்ற இடத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை நடாத்தினர்.
இது தொடர்பாக காத்தான்குடி நகர சபை முதல்வர் எஸ்.எச்.எம்.அஷ்பரிடம் கேட்ட போது காத்தான்குடி நகர சபை பிரிவில் திண்மக்கழிவகற்றலுக்கான காணி கொள்வனவு செய்யப்பட்டு திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவத்திற்காக முறையான ஒழுங்குகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வேலைகள் நிறைவடைந்தவுடன் இந்த பிரதேசத்தில் குப்பைகள் கொட்டுவது நிறுத்தப்படும்  தற்போது இந்த பகுதியில் குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீர் கேடுகள் இருந்தால் அவற்றை துப்பரவு செய்து வழங்கப்படும் என தெரிவித்தார்.
ட்டக்க
(kattankudy)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE